பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 ஒருவன் உலோபியா யிருந்தால், அவன் மகன் ஊதாரியா யிருப்பது நிச்சயம். -சீன தங்கம் உலுத்தனுக்குச் சொந்தமில்லை; உலுத்தனே தங்கத் திற்குச் சொந்தம். -அரேபியா மூடிய கையே சுவர்க்கத்தின் பூட்டு, திறந்த கையே அருளின் திறவுகோல். -பாரசீகம் உலோபியைப் புதைத்த பின்புதான் அவன் புதைத்துவைத்த வெள்ளி வெளியே வரும். -பாரசீகம் அடைத்த கதவைக் கண்டு, சயித்தான்கூடப் போய்விடுவான். -ஃபிரான்ஸ் உலோபி எதிர்காலப் பிச்சைக்காரன், அற்பன் எப்பொழு தும் இரப்பாளி. -போலந்து காய்ந்த எலும்பை நக்குவாரில்லை. -அல்பேனியா பழைய சட்டையை இனமாக அளிக்கும்போது, பொத்தான் களைக் கழற்றிக்கொள்ளாதே. -அயர்லாந்து ஒர் உருளைக்கிழங்கும், ஒரு மீனும் சேர்ந்துவிட்டால், உலோ பிக்குக் கலியாணச் சாப்பாடு. -அயர்லாந்து நாய்கூடக் காய்ந்த எலும்பை மறுக்கிறது. -அமெரிக்கா உலோபி பெண் பன்றியைப் போன்றவன், செத்த பிறகே பயன்படுவான். -ஸெக் உலோபி தன் நாய்க்கு வைக்கோலை வைத்து, கழுதைக்கு எலும்பைப் போடுவான். -இங்கிலாந்து உலோபியின் இரும்புப் பெட்டியில் சயித்தான் படுத்து ஆலோசனை செய்துகொண்டிருப்பான். -இங்கிலாந்து சொற்பத் துணியை மிச்சப்படுத்துவதற்காக உலோபி தன் சட்டையைக் கெடுத்து விடுவான். -ஷேக்ஸ்பியர் தந்தை உலுத்தன், மகன் ஊதாரி. -ஃபிரான்ஸ் உலோபி என்றுமே ஏழை. -ஜெர்மனி ஒநாய்க்காவது சில சமயங்களில் திருப்தியுண்டு, உலோபிக்கு அதுவுமில்லை. -ஜெர்மனி உலோபிக்கு இல்லாததாலும் பயனில்லை, இருந்தாலும் பயனில்லை. -லத்தீன் உ. ப-11