பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந ன் றி உப்பிட்டவரை உள்ளளவும் நினை. -தமிழ்நாடு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாதே. -தமிழ்நாடு வேலை முடிந்த பிறகு விளக்குமாறு சப்பட்டை. -இந்தியா வாயிலே சோறுள்ளவரை வார்த்தைகள் இனிமையாயிருக்கும்’ - இந்தியா ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின், "நீயார்? நான் யார்?" -தமிழ்நாடு. மூன்று நாள் நன்றியை நாய் மூன்று ஆண்டுகளுக்கு மறக்காது: மூன்று வருடம் நன்றியைப் பூனை மூன்று நாட்களில் மறந்து விடும். -ஜப்பான் நன்றி மூன்று வகை : இதயத்தில் உணர்தல், சொல்லால் கூறுதல், பதிலுக்கு உதவி செய்தல். -அரேபியா உன் தோட்டத்திலே செடியை நட்டால், அது பலன் கொடுக்கும்; ஒரு மனிதனை அங்கே நட்டால், அவன் உன்னை விரட்டி விடுவான். -அரேபியா மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கும் செலுத்த மாட்டான். -அரேபியா கொடுப்பவன் ஒருபோதும் நிளைவில் வைக்கக்கூடாது. பெறுபவன் ஒருபோதும் மறக்கக்கூடாது. -யூதர் ஒரு வீட்டினுள் நுழையும் பொழுது முன்னே பார்; வெளியே செல்லும் பொழுது பின்னே பார். -மலா பப் மனிதன் தனக்கு நன்மை செய்தவனின் அடிமை. -பாரசீகம் து.ாக்கிலிருப்பவனைக் கயிற்றிலிருந்து விடுவித்து விட்டால், அவன் உன்னை அதில் மாட்டிவிடுவான். -ஃபிரான்ஸ் உபகாரம் செய்பவன் நன்றியற்றவர்களை உண்டாக்குகிருன். -ஃபிரான்ஸ் எனக்கு உணவளித்தவனுடைய பாட்டை நான் பாடுகிறேன். -ஜெர்மனி நன்றியும் கோதுமையும் நல்ல நிலத்தில்தான் விளையும். -ஜெர்மனி