பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நம்பிக்கையே உலகை இயக்கி வருகின்றது. -இந்தியா நான் நம்புகிறவர்களிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற் றட்டும். -ஃபிரான்ஸ் நாம் எச்சரிகையுடன் இருப்பதால் நம்பிக்கை பெறுகிருேம். -கிரீஸ் நம்பிக்கையே நம்பிக்கையை உண்டாக்கும். -லத்தீன் ஒருவரையும் நம்பாதவனை மற்றவர்களும் நம்பமாட்டார்கள். -சீன வெறும் கல்லாலுைம், நீ அதை (உறுதியாக) நம்பில்ை, குணமடைவாய். -அரேபியா பிறவிக் குருடன் ஒளியை நம்பமாட்டான். -ஜெர்மனி நம்பிக்கை இழுத்துச் செல்லும் வண்டிக்கு வறுமைதான் சாரதி. -போலந்து உயிரோடிருப்பவருக்குத்தான் நம்பிக்கை, இறந்தவர்களுக்கு எதுவுமில்லை. -கிரீஸ் வேருென்றும் இல்லாதவர்களிடம் நம்பிக்கை மட்டும் இருக்கும். -கிரீஸ் துயரப்படுவோருக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை. -ஷேக்ஸ்பியர் சுரங்கத்தில் விலங்கிடப்பட்டு வேலை செய்யும் உழைப்பாளியும் நம்பிக்கையாலேயே உயிர் வாழ்கிருன். -ஒவிட் பயனற்றதைப் பற்றிக்கொண்டிருப்பதைவிட, நல்ல நம் பிக்கை மேலானது. -லத்தீன் உயிருள்ளவரை மனிதன் எதையும் எதிர்பார்க்கலாம். -லத்தீன் நீண்ட கால நம்பிக்கையால் ஆன்மாவும் சோர்ந்துவிடும். -இங்கிலாந்து தெய்வங்கள் அன்புடையவை, மனிதருக்கு அவை நம்பிக் கையை அணிக்கின்றன. -வில்லியம் மாரிஸ் பெரிய நம்பிக்கைகளால் பெரிய மனிதர்கள் உருவாகின்றனர். -இங்கிலாந்து