பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 அழகும் அடக்கமும் சேர்ந்திருத்தல் அரிது. -ஜுவீனஸ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒர் அழகுண்டு. ஆனல் ஒவ்வொரு வரும் அதைக் கண்டு கொள்வதில்லை. -கன்பூவியஸ் அழகு வாடும் மலர். H -பழைய ஏற்பாடு அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள். -இங்கிலாந்து அழகியின் முகமே அவளுடைய சீர் வரிசை. -இங்கிலாந்து அழகு என்பது தோல் அளவுதான். -இங்கிலாந்து அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது. —(?” ) அழகு வல்லமையுள்ளது. ஆனல் பணம் சர்வ வல்லமை யுள்ளது. -இங்கிலாந்து பண்பில்லாத அழகு மணமில்லாத மலர். -ஃபிரான்ஸ் அழகானதை நாம் பற்றிக் கொள்கிருேம்; பயனுள்ளதைத் தள்ளி விடுகிருேம். -ஃபிரான்ஸ் அழகு அடைத்த கதவுகளைத் திறக்கும். -ஜெர்மனி அழகிக்குக் கணவன் அவள் பிறக்கும் போதே அமைந் திருப்பான். -இத்தாலி கிணற்றுக்கு அழகு தண்ணிர், பெண்ணுக்கு அழகு திலகம். -இந்தியா அழகு என்பது தோலோடு சரி. -ஜப்பான் அழகான பறவைதான் கூட்டில் அடைபடும். -சீன அழகு மெளனமா யிருந்தும் பேசும். -ஃபிரான்ஸ் அழகுள்ள பெண்ணையும், கிழிந்த சீலையையும் யாராவது பிடித்து இழுப்பர். -ஃபிரான்ஸ் அழகுள்ள கடைக்காரி புளித்த கள்ளையும் விற்க முடியும். -ஜெர்மனி சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுதுகொண்டே தொங்கும்! -ஜெர்மனி ஒவ்வொரு பெண்ணுக்கும் பண்பைவிட அழகே முக்கியமாய்த் தோன்றுகிறது. -ஜெர்மனி கனவில் காண்பதைவிட, நனவில் பார்த்தால் அழகு குறைவு தான், - பல்ஜியம்