பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 விவேகிக்குத் தேவையான முதல் விஷயமும், முடிவான விஷயமும் உண்மையில் பற்று. -கதே வறுமையில் விவேகம் துலங்கும், செழுமையில் மங்கியிருக்கும். -ஹொரேஸ் விவேகத்தைத் தண்டித்தால், அதன் புகழ் உயரும். -டாஸிடஸ் கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் (மண்னேடு கலந்துள்ள) வெள்ளிக்கட்டி. -ஃபிராங்க்லின் பேரறிவுக்கும் பயித்தியத்திற்கும் நெருங்கிய உறவுண்டு. -டிரைடன் இயற்கை ஒரு வேலையை முடிக்கவேண்டும் என்ருல், ஒரு விவேகியைப் படைக்கின்றது. -எமர்ஸன் மூடன் கடைசியாகச் செய்வதை ஞானி முதலில் செய்கிருன். -இந்தியா செவிடாயிருந்து கேட்பவனயும், மெளனியாயிருந்து பேசு பவளுயும் இருப்பவனோடு நீயும் இரு. -Աե:5rf செருப்பில்லாமல் நடப்பவன் ஞானியாகிவிட மாட்டான். -ஜெர்மனி ஒவ்வொருவனுக்கும் ஒரு காசு மதிப்புள்ள அறிவாவது இருக் கத்தான் செய்யும். -பல்கேரியா அறிவாகிய மரம் கண்ணிரால் வளர்கின்றது. -ஸ்வீடன் LD L. 60) LD மூடர்களுக்குச் சிறைத்தே நாவிதன் தொழில் கற்கிருன். - -இந்தியா ஆடி மாதம் பிறந்த நரி ஆவணிமாத வெள்ளத்தைப் பார்த்து, என் ஆயுளில் இவ்வளவு வெள்ளத்தைக் கண்டதில்லை!" என்றது. -இந்தியா தேள் கடிக்கே மந்திரிக்கத் தெரியாதவன் பாம்புப் புற்றில் கை விடுகிருன். -இந்தியா மூடன் நெடுநேரம் தங்கியிருந்தால், அவனைக் கண்டுபிடித்து விடுவார்கள். -இந்தியா