பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 வாயை மூடிக்கொண்டிருக்கிறவரை மூடனும் கனவான்தான். -இந்தியா அன்னம் போல் நடைநடந்து, உள்ள நடையும் போச்சு. -தமிழ்நாடு புதரிலே கைவிட்டு (மூடர்கள்) பாம்புகளைக் கிளப்புகிருர்கள். -ஜப்பான் அறியாமை உள்ளத்தின் இரவு, மதியும் நட்சத்திரங்களும் இல்லாத இரவு. -சீன மூடன் வெற்றியடைவதும், அறிவாளி தோல்வியடைவதுமே இவ்வுலகில் நிகரற்ற ஆச்சரியங்கள். -அரேபியா கையிலே மாற்று மருந்து இருக்கிறதென்று விஷத்தைப் பருக வேண்டாம். -அரேபியா கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிருன்; மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்க விட்டுக் கொள்கிருன். -ԱէԶsrf முகட்டுப் பூச்சிகளுக்கு அஞ்சிப் போர்வையை எறிந்து விடாதே. -பாரசீகம் மூடனுக்கு அவன் தந்தை சுல்தானின் மந்திரியாயிருந்தார் என்பதில் என்ன பயன்? -பாரசீகம் எலி தன் வளைக்குள் நுழைய முடியவில்லை; அது வாலில் ஒரு துடைப்பத்தையும் கட்டிக்கொண்டு சென்றதாம். -பாரசீகம் குருவி, தன் கால்களை மேலே துருக்கி, வானம் தன்மேல் விழுந்து விடாமல் காத்துக் கொளகின்றது! -பாரசீகம் யானை தன் தந்தங்களைத் தாங்குவதற்கு நீ போய் உதவி செய்ய வேண்டியதில்லை. -¿Fu urrLb தலை ரோமத்தைவிடப் பேன்களை அதிகமாக நேசிக்க வேண்டாம். -சயாம் தேங்காய்க்கும் கனிக்கும் சண்டை போடுவதைவிட சிரட் டைக்கும் கொட்டைக்கும் ஒருவன் சண்டையிடுவான். - -ஜெர்மனி மூடர்களை உற்பத்தி செய்ய விதைவிதைக்க வேண்டியதில்லை; அவர்கள் தாமாகவே முளைக்கிருர்கள். -போலந்து