பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை இசையில் இறைவன் வசிக்கிருன். -இந்தியா சொல்வதற்குக்கூடப் பொருந்தாத விஷயங்கள் எல்லாம் இந்தக் காலத்தில் பாடப் பெறுகின்றன. -ஃபிரான்ஸ் ஃபிடில்காரன் வீட்டில் எல்லோரும் ஃபிடில் வாசிப்பர். -இங்கிலாந்து எட்டு வீடு தட்டியும் ஒச்சன் குடி பட்டினி. -தமிழ்நாடு இசையின் அருமை தெரியாதவர்களுக்குப் புருவும் இனிமை யாகப் பாடும். -கிரீஸ் அநேகர் பாட முடியும், ஆனல் பாட்டுத்தான் தெரியாது. -கீழ் நாடுகள் விருந்தை விருந்தாக்குவது இசை. -ஜெர்மனி பாட முடியாதவன் பாடிக்கொண்டே யிருப்பான். -ஜெர்மனி நல்ல பாட்டை மும்முறை பாடலாம். -லெக் ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டிருப்பவன் தீமை - செய்ய நினைக்கவில்லை. -செர்பியா காதலும் இசையும் தவிர மற்றவையெல்லாம் அழிந்துவிடும் . -ஸ்காட்லந்து இசையுள்ள இடத்தில் கெடுதல் இராது. -ஸ்பெயின் துக்கமுள்ள மனத்திற்குச் சோகமான இசை இன்பமாயிருக்கும். -இங்கிலாந்து இசை காதின் கண். -இங்கிலாந்து புலன் இன்பங்களில் குற்றமற்றது இசை ஒன்றுதான். -எஸ். ஜான்ஸன் இசை தேவர்களின் மொழி. -கார்லைஸ் இசை ஒன்றுதான் உலகப் பொது மொழி. -இங்கிலாந்து இசை வயிற்றை நிரப்பாது. -ஃபிரான்ஸ் வேதனையுள்ள உள்ளத்திற்கு இசை மருந்து. -லத்தீன் இசையுள்ள இடத்தில் தீமை இராது. -ஸ்பெயின்