பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோயில்

ஒவ்வொருவன் நெஞ்சிலும் ஒரு தேவாலயம் இருக்கின்றது.

-ஜெர்மனி

தூக்கம் வராதவன் மாதாகோயிலுக்குப் போகிறான். -( " ) ஆலயத்திற்கு அருகிலிருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான். - அயர்லந்து கிராமந்தோறும் கிறிஸ்துவின் கல்லறை உள்ளது - பல்கேரியா குளிர்காலத்தில் கோயிலுக்குப் போகாதவன் நல்லகாலத்தில் நரகத்தை அடைவான். -ஃபின்லந்து நீ கடவுளைக் காணுமுன், அடியார்கள் உன்னை உண்டுவிடுவார்கள். -ருமேனியா விக்கிரகங்கள் செய்பவன் அவற்றை வணங்குவதில்லை. -ரஷயா கோயிலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் தெய்வங்களை வெறுப்பார்கள். -சீனா இரவும் பகலும் சிறைச்சாலை அடைத்தேயிருக்கிறது; ஆயினும் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்பொழுதும் திறந்தே யிருக்கின்றன; ஆனால் அவைகளில் ஆளேயில்லை. -சீனா கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். - தமிழ்நாடு ஆண்டவனுக்காக ஒரு கோயில் அமைத்தவுடன், சயித்தானும் அருகிலே ஒரு மடத்தைக் கட்டுகிறான். -இங்கிலாந்து

ஆலயம் என்பது நான்கு சுவர்களிடையே உள்ள கடவுள்.

-ஃபிரான்ஸ்

கோயிலுக்குள்ளே செல்லும்பொழுது. உலகை வெளியே விட்டுச் செல்லுங்கள். - ஸ்பெயின்

கட்டாயத்தினால் கோயிலுக்கு வந்தவன் தொழமாட்டான்.

-ஸ்லாவேகியா

தீயது எதையும் கோயிலுக்குள் வரவிடவேண்டாம். -லத்தீன் உண்மையான கோயில்கள் இதயத்தில் அமைந்துள்ளன. -( " )