பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 இயற்கை இறைவனின் கலை. -தாந்தே கலைஞனைக் காப்பாற்ற முடியாத கலை அற்பமானதுதான் -ஃபிரான்ஸ் தந்தத்தை வர்ணத்தால் (மேலும்) வெண்மையாக்குவது இயற்கையைக் கலையால் கெடுப்பதாகும். -லத்தீன் சிங் த னை ந்ெதனே என்பது உள்ளத்தின் விளக்கு -மலாப் மனிதன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து, அவன் அழுவது தன்னைப் பார்த்து. -இந்தியா வாழ்க்கை என்னும் நூலில் ஆழ்ந்த சிந்தனைகள் என்ற மணிகள் கோத்த மாலையுடையவனுக்கு வேறு ஜபமாலை வேண்டியதில்லை. -பாரசீகம் ஒன்றை மறுக்க விரும்பினால், அதுதான் நினைவிலிருக்கும் -ஃபிரான்ஸ் உன்னிடமே நீ கேட்டுக்கொள்வதுதான் தலைசிறந்த உபதேசம். -ஜெர்மனி ஆரம்பிக்கும்போது-முடிவைச் சிந்தனை செய். -பல்கேரியா இரவும் இருளும் சிந்தனைக்குத் தாய்மார்கள். -டென்மார்க் தொடக்கத்தில் சிந்தனை செய்யாதவன் முடிவில் கொட்டாவி விடுகிருன். -இத்தாலி நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன். -லத்தீன் சிந்தனைகளைச் சேர்த்துக் கட்டி வைக்கக்கூடிய கயிறு ஒருகாலும் தயாராகவில்லை. -லத்தின் இரண்டாம் முறை எண்ணிப் பார்ப்பது குற்றமில்லை. -அயர்லாந்து இழிவான சிந்தனைகளை நினைக்கவேண்டாம். -கன்ஃபூவியஸ் உயர்ந்த சிந்தனைகள்ை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பெருஞ் செயல்களாகும். -இங்கிலாந்து