பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 குழந்தையை ஒரு வேலைக்கு அனுப்பினால், நீயும் போக வேண்டி யிருக்கும். -ஆரீமீனியா ஒரு கயிறு பிரிந்திருந்தால், அது பல கயிறுகளைப் பிரியக் செய்யும். -யூதர் ஒருநாள் பயணத்திற்கு இருநாள் உணவும், கோடை யாத்திரை யில் மாரிக் காலத்து உடைகளையும் எடுத்துக்கொள். -மங்கோலியா சர்க்கரையாலே சாகக் கூடியவனுக்கு நீ விஷம் கொடுப் பானேன்? -கீழ் நாடுகள் ஒநாயுடன் நீ விருந்துண்ணும்போது, உன் நாயும் பக்கத்தி லிருக்கட்டும். -கீழ் நாடுகள் தண்ணிர் நாடிவரை வந்த பிறகுதான் நாய் நீஞ்சத் தொடங்கும். -கீழ் நாடுகள் ஒடினல் மட்டும் போதாது; உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும். -ஃபிரான்ஸ் எல்லா மடுக்களுக்கும் பாதுகாப்புச் சுவர் இராது. -ஜெர்மனி துடைக்க முடியாதவைகளைத் தட்டவேண்டும். -ஜெர்மனி சிறு ஆணிகளுக்குப் பெரிய சம்மட்டிகள் பயன்படா. -( ' ) கம்பளம் விற்றுக் கடனைக் கொடுக்கலாம் என்ருல், கம்பளி ஆட்டை விற்கக் கூடாது. -ஜெர்மனி முதுமையில் ஊன்றிக்கொள்ள இளமையிலேயே ஒருவன் ஒரு கழி தயாரித்துக் கொள்ளவேண்டும். -ஜெர்மனி பருவைக் கிள்ளிப் பெரிய புண்ணுக்க வேண்டாம். - -அமெரிக்கா பூனைகளை வளர்க்காவிட்டால், எலிகளை வளர்ப்பதாகும். -வேல்ஸ் அடுத்த வீட்டு வாசலில் குரங்காட்டி வந்துவிட்டால், நீயும் காசு எடுத்து வைத்துக்கொள். -ஸெர்பியா