பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அநுபவங்களின் எதிரொலிகள் பழமொழிகள். -ஸ்விட்சர்லந்து பழமொழியில் உயர்ந்த கருத்து மலிவாய்க் கிடைக்கும். -( ' ) பழமொழிகள் பொது மக்களின் பேச்சு. -சீன ஒரு மனிதனுடைய வாழ்க்கை ஒரு பழமொழியின் மீதே அம்ைக்கப் பெற்றுள்ளதை அடிக்கடி காண்கிருேம். -யூதர் காலம் கழிகின்றது. ஆனல் பழமொழிகள் நிலைத்திருக்கின்றன. -இந்தியா பழமொழியில் உமி கிடையாது. - -இந்தியா மூடனிடம் பழமொழியைச் சொன்னல், அதன் பொருளையும் அவனுக்கு விளக்கவேண்டும். -ஆப்பிரிக்கா சந்தர்ப்பம் வந்ததும், பழமொழியும் வரும். -ஆப்பிரிக்கா உங்கள் முன்னேர்களின் சொற்களை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள் -ஆப்பிரிக்கா ஹீ அத்தனை பழைய மொழிகளையும் இந்த நூல் எங்கிருந்து பெற்றது? -நீக்ரோ பால் புளிக்குமா?. பழமொழியில் தவறு இருக்குமா? -இந்தியா உணவுக்கு உப்பு எப்படியோ, அப்படிப் பேச்சுக்குப் பழமொழி. -அரேபியா தோட்டங்களுக்குப் பூக்கள்: உணவுக்குத் தானியம்: உடைகளுக்கு மணிகள்: வானத்திற்குத் தாரகைகள் ஆகியவை எப்படியோ, அ ப் ப டி யே பேச்சுக்குப் பழமொழிகள். -யூதர் மிகவும் சத்தியமான வசனங்கள் முரண்பாடுள்ளவைகளாகத் தோன்றும். = -டாவோ வானம் இடிந்து வீழ்வதில்லை, பழமொழியும் பொய்ப்பதில்லை. -ஜெர்மனி தேசந்தோறும் ஒழுக்கம் வேறு ஒழுக்கத்திற்கு ஏற்றவை பழமொழிகள். I -ஜெர்மனி தெருக்களில் பேசும் மக்களின் அறிவு பழமொழிகள். -( ' ) நினைவிலுள்ள நல்ல பழமொழி பெட்டியிலுள்ள தங்க நாணயம் போன்றது. -ஸ்வீடன்