பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 பழமொழிகள் அநுபவங்களின் எதிரொலிகள். -ஸ்வீடன் பழமொழி இறைவனின் குரல். -ஸ்பெயின் ச ரித் தி ரம் (பலரும்) ஒப்புக்கொண்டுள்ள பொய்களே சரித்திரம். -இங்கிலாந்து பழைய சரித்திர நிகழ்ச்சிகள் மீண்டும் ஏற்படுகின்றன. - ( ' ) பாவம் வரலாறுகளை எழுதுகின்றது, நன்மை அமைதியாயிருக் கின்றது. 譬 -கதே நூல்கள் ஒரு நூலை முதலில் வாசித்தல் ஒரு_புதிய நண்பனை அடை தலாகும்; அதை மறுமுறை வாசித்தல் பழைய நண்ட னைச் சந்திததலாகும். * - சீன புத்தகத்தைத் திறந்து பார்த்தாலே லாபமுண்டு. -சீன பழைய காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒருவன் புரிந்து கொள்ள வேண்டுமானல், அவன் ஐந்து வண்டிப் புத்த சங்களைப் படிக்கவேண்டும். -சீன பட்டதாரி நூல்களைப் பற்றி விவாதிப்பான், கசாப்புக்காரன் பன்றிச8ள ப் பற்றி விவாதிப்பான். -சீன நூல்களைப் பெற்றவன் மகிழ்ச்சியுள்ளவன்; ஆனால் அவைகளும் தேவையில்லாத நிலையில் (அவைகளை மனத்திலே வாங்கிக் கொண்டபின்) மேலும் மகிழ்ச்சியடைவான். -சீன நூல்கள் மனத்தோடு பேசுகின்றன, நண்பர்கள் இதயத்தோடு பேசுகின்றனர், இறைவன் ஆன்மாவுடன் பேசுகிருன், மற்றவர் அனைவரும் செவியுடன் பேசுகின்றனர். -சீன புத்தகம் சட்டைப்பைக்குள் கொண்டுசெல்லும் பூந்தோட்டம். + -அரேபியா புத்தகங்களைப் படித்தறிந்தவனுக்கு நான்கு கண்கள் உண்டு. -வேல்ஸ்