பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிபாடு

என் பெயரால் எங்கே இரண்டு மூன்று பேர்கள் கூடியுள்ளனரோ, அவர்களின் நடுவில் நான் இருக்கிறேன். - புதிய ஏற்பாடு சொற்களில்லாமலே தொழுகையும் இருக்கலாம். - இங்கிலாந்து பயத்தினால் மட்டும் இறைவனைத் தொழுவோர், சயித்தான் வந்தால், அவனையும் தொழுவர். - இங்கிலாந்து பிரார்த்தனை மேலே ஏறும், அருள் கீழே வரும். - யூதர் கடவுளைத் தொழு, ஆனால் பாறைகளைக் கவனித்துப் படகை ஓட்டு - இந்தியா உன் கண்களையும், நாசியையும், வாயையும் மூடிக்கொண்டு கடவுளைத் தொழு. வெளிக் கதவுகளை அடைத்த பிறகு உன் உட்கதவுகள் தாமே திறக்கும். -இந்தியா நண்பா! கடவுளை நேசிப்பதில், விவசாயி தன் நிலங்களை நேசிப்பதுபோல் இருக்கவேண்டும்; அவன் நஷ்டங்கள் அடைகிறான், தீர்வைகள் செலுத்துகிறான், எனினும் தன் வயல்களில் ஆசை வைத்திருக்கிறான். -இந்தியா

சாமியைத் தூக்குவோர் சாமியைக் கும்பிடுவதில்லை.

- இந்தியா

பிரார்த்தனையும் வேண்டும், மருந்தையும் பயன்படுத்து.

- இந்தியா

பிரார்த்தனைகள் வீணாய்ப் போயிராவிட்டால், உலகமே பாழாய்ப் போயிருக்கும். -இந்தியா நாய்களின் பிரார்த்தனை பலித்துவிட்டால், வானத்திலிருந்து எலும்புகள் மழையாகப் பெய்யும். - துருக்கிஸ்தானம் கப்பலுக்குரிய பிரதேசம் கடல், இதயத்திற்குரிய பிரதேசம் தியானம், - மலாய்