பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சரிக்கை ங்ெகம் என்று சொன்னவுடன் ஒரு மரத்தில் ஏறிக்கொள், -எகிப்து முதல் வண்டி குடை சாய்ந்துவிட்டால், அடுத்த வண்டி அதிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். -சீன பணம் களவு போனபிறகு, காவல் நாயைத்தான் அடிக்க முடியும். -சீன போக்கிரி உன்னை முத்தமிட்டால், உன் பற்கள் சரியாயிருக் கின்றனவா என்று எண்ணிப் பார். -யூதர் மனிதன் எந்தப் பக்கம் விழுவான் என்பது- முன்னல் தெரிந் திருந்தால் அந்தப் பக்கம் வைக்கோலைப் பரத்தி யிருப்பான். -ஃபின்லந்து ஒவ்வொரு கல்லின் அடியிலும் ஒரு தேள் உறங்கிக் கொண் டிருக்கும். -கிரீஸ் ஒர் அன மெழுகுவத்தி பற்றி மாஸ்கோ நகரம் எரிந்தது. (1443-ல் அர்ச். நிகோலஸ் கோயிலிலிருந்த ஒரு மெழுகு வத்தியால் மாஸ்கோ தீக்கிரையாயிற்று. 1537ல் ஒருவர் வீட்டிலிருந்த மெழுகுவர்த்தியால் மீண்டும் எரிந்தது.) -ரவி:யா ேேழ விழுந்தவனைக் கண்டு சிரிக்கவேண்டாம்; உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது. -ரவியா பாம்பைக் கண்டுபிடிக்க விளக்கை எடுப்பவன், முதலில் தன் காலடியைப் பார்த்துக் கொள்ளவேண்டும். -கிரீஸ் ஒழுக்கம் சோதனைகள் மூலம் நல்லொழுக்கம் வளர்வதே ஆண்டவன் விருப்பம். -அரேபியா பண்பில்லாத இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது. -அரேபியா பெற்ருேருக்கு மரியாதை குறையும்பொழுது, மற்ற ஒழுக்கங் களுக்கும் அபாயம், -சீன