பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 துன்பத்தின் நடுவில் பண்பு செழித்து வளரும். -ஜெர்மனி பண்பு என்ற நாணயம் உலகெங்கும் செலாவணியாகும். -கிரீஸ் நேர்மையற்றதைச் செய்யவேண்டாம்; உண்மையற்றதைப் பேச வேண்டாம். - -கிரீஸ் ஒழுக்கமே (ஒருவனுயை விதி) விதி. -கிரீஸ் ஒழுக்கம் என்பது நெடுநாள் வழக்கம். -கிரீஸ் நேர்மையாளன் ஒர் எலும்புத் துண்டுக்காகத் தன்னை நாயக மாற்றிக் கொள்ளமாட்டான். -டென்மார்க் நேர்மையாளன் உலகின் (பொதுப்) பிரஜையாவான். -டென்மார்க் பண்புக்குப் பெரும் பகை செல்வம். -டென்மார்க் எதிர்ப்பு இல்லாவிட்டால், பண்பு வாடி உதிர்ந்துவிடும். -லத்தீன் தங்கத்தினும் மதிப்புக் குறைந்தது வெள்ளி; தங்கத்திலும் மதிப்பு உயர்ந்தது பண்பு. -லத்தீன் ஒவ்வொரு மனிதனும் கேள்விக்கு முந்தவேண்டும், பேச்சுக்குப் பிந்தவேண்டும். -புதிய ஏற்பாடு மனிதர்களைவிட அதிக மரங்கள் நேராக வளர்கின்றன. -சீன அறிவைத் தந்தையாகவும், திருப்தியைத் தாயாகவும், சத்தியத்தை சகோதரனாகவும் வைத்துக்கொள். -சிக்கியர் மனிதனின் முதல் இலட்சியம் பரிசுத்தம். -பார்சி மனிதன் தன் பையைப் பணத்தால் நிரப்புவதோடு, நேர்மையாலும் நிரப்பவேண்டும். -பார்சி இரவுக்குத் தனிச் சட்டம். (ஒழுக்க விதிகள்) -போலந்து முற்றிலும் யோக்கியமா யிருப்பவனுக்கு அணிவதற்குச் சட்டை இராது. -போலந்து