பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பேராசை மனச்சாட்சியை இழத்தல் சாம்பலுக்காகப் படத்தை எரிப்பது போலாகும். -சீன ம்னச்சாட்சி ஒரு கூடு; அதில்தான் ஒவ்வொரு நன்மையும் குஞ்சு பொரிக்கும். -வேல்ஸ் பரிசுத்தமான மனச்சாட்சிதான் வீட்டுக்குச் சிறந்த விருந்தாளி. -ஸெக் மனச்சாட்சி ஆயிரம் சாட்சிகளுக்கு ஈடாகும் . -ஸெக் மன கி றை வு திருப்தியுள்ளவனை அழிக்கவே முடியாது. -சீன இறைச்சி கிடைக்காதவன் ைேரயுடன் திருப்தியடைய வேண்டும். -டென்மார்க் திருப்தியே வேண்டியதையெல்லாம் தங்கமாக்கும். -இங்கிலாந்து மனநிறைவு அரண்மனைகளைப் பார்க்கிலும் குடிசைகளிலே அதிகம் தங்குகின்றது. -இங்கிலாந்து பேறுகளில் சிறந்தது நிறைவுள்ள மனம். -லத்தீன் உன்னிடம் இருப்பதைப் பற்றி எண்ணும் அளவுக்கு, இல்லாததைப் பற்றி எண்ணவேண்டாம். -கிரீஸ் செல்வத்தினும் உயர்ந்தது திருப்தி. ஃபிரான்ஸ் நாம் விரும்புவது கிடைக்காதபோது, எது கிடைத்ததோ அதை விரும்பவேண்டும். -ஃபிரான்ஸ் நாளைய கோழியைவிட இன்றைய முட்டை மேலானது. -துருக்கி உனக்குக் கிடைத்த எலும்புத் துண்டைக் கருவிக் கொண்டிரு. -Աե5rf மனிதனுக்கு வேண்டியது ஏழடி நிலமே. -கீழைநாடுகள் திருப்தியுடன் வாழ்ந்தால், நீயே அரசன். -பாரசீகம் (வேண்டாம் என்று) தியாகம் செய்து தள்ளுவதில் ஒவ்வொன் றிலும் ஏதோ நன்மை யிருக்கிறது. -ஃபிரான்ஸ்