பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பிரார்த்தனை நம்மை ஆண்டவன் பாதையில் பாதி வழி கொண்டு செல்லும்; உபவாசம் அவனுடைய அரண்மனை வாயிலண்டை கொண்டு செல்லும்; தான தர்மங்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும்.

-கீழை நாடுகள்

பறவைகள் இறைவனின் புகழைப் பாடுகையில், நான் மௌனமா யிருக்கலாமா?

-பாரசீகம் அறுபது ஆண்டுப் பக்தியைவிட ஒரு நிமிடத் தியானம் மேல். - ஸூஃபி தன்னை மறத்தல் இறைவனை நினைத்தலாகும். -ஸூஃபி தொழுகையின்போது நீ கைகளைக் கட்டிக் கொள்ளுகிறாய், (அப்பொழுது) கர்த்தர் தம் கரங்களை நீட்டிக்கொண்டிருக்கிறார். - ஜெர்மனி (கடலின்) கரை நெருங்கியவுடன் பிரார்த்தனைகள் நின்று விடுகின்றன. -ஸூஃபி தேவை ஏற்பட்டால் யூதனிடமும், கஷ்டம் நேர்ந்தால் பாதிரியாரிடமும், பயம் வந்தால் கடவுளிடமும் செல்வது மக்களின் வழக்கம். - போலந்து படுத்துகொண்டே பிரார்த்தனை செய்தால், கர்த்தர் உறங்கிக் கொண்டே கேட்பார். -ஜெர்மனி பக்தியுடன் தொழு, அத்துடன் சம்மட்டியைப் பலமாகத் தட்டிக்கொண்டும் இரு. - இங்கிலாந்து தொழுகை படிக்க வேண்டுமானால், கடலுக்குப் போ. -( " ) கரை சேர்ந்தவுடன் தொழுகையும் நின்றுவிடும். - இங்கிலாந்து பிரார்த்தனையே பகலின் திறவுகோலாயும், இரவின் பூட்டாயும் இருக்கவேண்டும். -இங்கிலாந்து

பத்து விரல்களுக்குள் கடவுளைப் பிடித்து அடக்கி விடலாம்.

-பல்கேரியா

ஆலயத்தை வலம்வருபவர்கள் அத்தனை பேர்களும் தெய்வீக ஞானிகள் அல்லர்.

-ஸெக்