பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 உனக்காகப் பொய் சொல்லுபவன், உனக்கு எதிராகவும் சொல்லுவான். -அமெரிக்கா அநேகமாக என்று சொன்னல் ஒரு பொய் குறைகின்றது. -அமெரிக்கா நொண்டியைவிடப் பொய்யனைச் சீக்கிரம் பிடித்துவிடலாம். -இத்தாலி பொய்யோடு சிறிது மெய் சேர்ந்துவிட்டால் நம்மை நம்பும்படி செய்கின்றது. -இத்தாலி பொய் எப்பொழுதும் ஆயுதபாணியாயிருப்பினும், தோல்லி அதற்குத்தான். ஸ்பெயின் பொய்யும் ஒரு பெரிய இடத்துப் பெண். -ஸ்பெயின் என்னிடம் எப்பொழுதும் பொய் சொல்லுபவன் என்னை ஒரு போதும் ஏமாற்றுவதில்லை. -ஸ்ெக் உண்மையை அறிய ஒரு பொய்யைச் சொல்லு. பொய்களைக் கற்பனை செய்பவன் விளங்கமாட்டான். -குர்ஆன் பொய் சொல்லும் உதடுகள் இறைவனுக்கு வெறுப்பானவை. -பழைய ஏற்பாடு கோழை கஷ்டத்திலிருந்து தப்புவதற்கு வழி பொய். -இங்கிலாந்து முரட்டுத்தனமாய்ப் பேசுதல் முறையாகப் பொய் சொல்வதை விட மேலானது. --லெக் -இங்கிலாந்து பொய்க்கு வற்ருத ஊற்று இருக்கிறது. -இங்கிலாந்து பாதி உண்மை பெரிய பொய்யாகும். -இங்கிலாந்து ஆடவர்கள் பொய் சொல்லவும், பெண்கள் அவைகளை நம்பவும் பிறந்தவர்கள். -இங்கிலாந்து. பாவத்திற்கு பல கருவிகள் உண்டு, ஆனால் பொய் எல்லாக் கருவிகளுக்கும் ஏற்ற பிடி. -ஹோம்ஸ் பொய்யைத்_திரும்பத் திரும்பச் சொன்னல், அது பெரிய உருவாகிவிடும். -லத்தீன் 14-.ப - ـكة