பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 செருக்கைவிடப் பணிவு அதிக ஆதாயமடைகின்றது. -லத்தின் உன்னிலும் மேலாயிருப்பவர்களுக்கு இடம்விடு. -லத்தின் நீ உன்னை ஆட்டுக்குட்டியாகச் செய்துகொண்டால், ஒ தாய் உன்னை விழுங்கிவிடும். -ஃபிரான்ஸ் மரியா ைத மரியாதையைப் போல் மலிவான பொருள் வேறில்லை. -ஸ்பெயின் மரியாதை செலுத்தித் தீமையடைந்தவர் இல்லை. -இத்தாலி முடவர் முன்னல் நொண்டி நடக்காதே. -ஃபிரான்ஸ் மரியாதையுள்ளவன் மரியாதை யற்றவர்களிட மிருந்தே மரியாதையைக் கற்கிருன். -துருக்கி நல்லவரோ, தீயவரோ, மரியாதையுடன் சென்ருல். கதவுகள் திறக்கப்படுகின்றன. -இங்கிலாந்து எனக்கு ஒரு மரியாதை செய்தால், நான் பதிலுக்குப் பத்துச் செய்வேன். -சீன கழுதையின் வாலையும் மனிதன் முத்தமிடுகின்றனர் என்ருல், காரியமாகத்தான். -பாரசீகம் மரியாதை காட்டினல் பூனைக்கும் மகிழ்ச்சிதான். -லெக் மரிதையாய்க் கேட்டால், கோட்டைகளும் உனக்கு வழி விடும். -லெக் சட்டைப்பை காலியாயிருந்தாலும், தொப்பியை நிமிர்த்தி வைத்துக்கொள். - -ஸ்பெயின் தொப்பியை உடனே துாக்கவும், பையை மெதுவாகத் து.ாக்கவும். -ஸ்காட்லந்து மரியாதையில் பெரும் பகுதி வழக்கத்தால் வருவது. -வேல்ஸ் நரைத்த தலைக்கு மரியாதை செய்யவேண்டும்; வழுக்கைத் தலைக்கும் ஒரு வணக்கம் உரியது. -எஸ்டோனியா