பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 பிச்சைக்காரன் பணக்காரனைல் அவன் பெருமிதத்திற்கு அளவே யிராது. -பிரான்ஸ் செருக்குடைய இருவர் ஒரே சேணத்தில் அமரமுடியாது. -( ' ) பணமில்லாதவனை ஒருவருக்கும் தெரியாது, பணமுள்ள வனுக்குத் தன்னையே தெரியாது. -ஜெர்மனி உயரேயே பார்த்துக் கொண்டிருப்பவன் தரையிலிருந்து ஒரு காசுக.டப் பொறுக்க முடியாது. -ஜெர்மனி பிச்சைக்காரன் குதிரைமேல் ஏறிவிட்டால், சயித்தான் கூட அவனே எட்டிப்பிடிக்க முடியாது. -ஸெக் அழகின் சகோதரி கர்வம், மகள் ஆசை. -ஸெக் ஒசைப்படும் இலாடத்திற்கு ஒர் ஆணி தேவை. (தம்மிடம் இல்லாத குணத்தைப்பற்றி மனிதர் பெருமையாய்ப் பேசுவர்.) -ஸ்பெயின் அதிகப் பணிவு அரை அகம்பாவம். -யூதர் வழுக்கைத் தலைக்குத் தங்கச் சீப்பு. -ஆர்மீனியா மனிதரில் எவரையும் ஒதுக்கித் தள்ளாதே. -டாவோ பூட்ஸ் அணிந்தவனுக்குச் செருப்பு அணிந்தவனைக் கண்டால் கண் தெரியாது. -இங்கிலாந்து அகம்பாவம் தன் எஜமானனைக் கிழே ஒரு முறையாவது தள்ளாமல் விடாது. -ஸ்காட்லந்து விருந்தில் பாதி செருக்கு. -ஸ்காட்லந்து கட்டை மீது ஒரு நகையைப் போட்டால் அதுவும் விறைப்பாக நிற்கும். -எஸ்டோனியா செருக்கைப் பற்றி அதிகச் செருக்கோடு நிந்திப்பவர்கள் இருக்கிருர்கள். -இத்தாலி செருக்கில்ை, இல்லை’ என்றும், பலவீனத்தால் சரி என்றும் ஒருபோதும் சொல்லாதே. -ஸ்பெயின் வெள்ளாட்டுக்கு வால் மேலும் நீளமா யிருந்தால், அதைக் கொண்டு அது நட்சத்திரங்களையே தட்டிவிடும். -லெக் ஏழைகளின் செருக்கு நீடித்திருப்பதில்லை. -டென்மார்க் செருக்கினல் பசி, தாகம், குளிர் ஆகியவற்றைவிட அதிக நஷ்டமுண்டாகும். -இங்கிலாந்து