பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 செருக்கு முன்னல் செல்லும், அவமானம் பின்னல் செல்லும். -இங்கிலாந்து அகம்பாவத்திலுைம் ஒருவர் அடக்கமாயிருக்கக்கூடும். -மாண்டெயின் செருக்கும் தற்பெருமையும் மனிதனின் ஆதிப் பாவம். -ஃபிரான்ஸ் மயிலே, உன் கால்களைப் பார்த்துக் கொள். -ஜெர்மனி ஒருவருடைய குற்றங்களை மறைப்பது செருக்கு. -யூதர் குதிரை மேல் இருப்பவனுக்குத் தன் தந்தையையே தெரியாமற் போகும். - -ரஷ்யா நேற்றுத்தான் முட்டையிலிருந்து வெளிவந்தது; இன்று அது முட்டையைப் பழிக்கிறது. -துருக்கி தற் புக ழ் ச் சி தற் புகழ்ச்சியின் வாடையைத் தாங்க முடியாது. -எஸ்டோனியா வீட்டில் எக்காளம் ஊதினால், செவிகளுக்கு வேதனை. (தற் பெருமை தவருகும்.) -எஸ்டோனியா път бял b கேட்கும்பொழுதே சந்தேகப்பட்டால், இல்லை யென்றே பதில் வரும். -போலந்து வெட்கம் நல்லொழுக்கத்தின் சின்னம். -ஹங்கேரி உலகத் சின் முன்பு வெட்கமில்லாதவன் கடவுள் முன்பும் அஞ்ச மாட்டான். -சுவீடன் கூச்சப்பட்டுக் கொண்டே யிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது. - -ஆப்பிரிக்கா