பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெ லிவு மெலிந்தவனுக்குத்தான் முதலில் குளிர் விறைக்கும். -சீன ஆடுகின்ற சுவரை ஒவ்வொருவனும் தள்ளிவிட்டுப் போவான். -சீன கீழே விழுந்து விட்டவனை எல்லோரும் வெறுப்பர். -சயாம் ஒரு மனிதன் கீழே விழுந்தால், உலகமே அவன் மேல் ஒடத் தொடங்கும். -அமெரிக்கா ஒருவன் பலவீனமாயிருந்தால் அவனை ஆண்டு அடக்க ஒருவன் வந்தே தீருவான். -லத்தீன் பலவீனர்களுக்குள்ளே, தன் பலவீனத்தை உணர்ந்திருப்பவனே பலசாலி. -சுவீடன் மெலிந்தவைகள் ஒன்றுசேர்ந்தால் வலிமைதான். -இங்கிலாந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பலவீனமான ஒரு பகுதி இருக்கும். - -கிரீஸ் நியாயமான விஷயத்தில் மெலிந்தவரும் பலவ்ான்களை வென்று விடுகின்றனர். -கிரீஸ் மெ ளனம் அறிவுக்கு வேலி மெளனம். -யூதர் மெளனம் என்ற மரத்தில் சாந்தி என்ற கனி தொங்கு கின்றது. -அரேபியா மெளனம் என்பது சிந்தனையின் கூடு. -குதிர்ஸ்தானம் மூடிய வாயின் இசை இனியது. -அயர்லந்து மெளனம் வேறு, மறைப்பது வேறு. -இத்தாலி பதில் சொல்லாமலிருப்பதும் ஒரு பதில்தான். -லெக் பேச்சினல் பின்னர் வருந்த நேருகின்றது. மெளனத்தினல் ஒருபோதும் அப்படி, நேருவதில்லை. -டென்மார்க்