பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்

ஒழுக்கத்தை இழந்தவன் தன் சமயத்தையும் இழக்கிறான்.

- இங்கிலாந்து

ஒழுக்கமுறை தீமையை மறைத்து வைக்கும், சமயம் அதைத் தீர்த்துவிடும்.

- வேல்ஸ்

சமயம் இல்லாத மனிதன் கடிவாளம் இல்லாத குதிரை. -லத்தீன் பசுக்கள் என்ன நிறமானாலும் பால் வெள்ளை தான்; மலர்கள் பலவகையானாலும் பூசை ஒன்றுதான்; சமயங்கள் பலவானாலும் மூர்த்தி ஒன்றுதான். - இந்தியா மோஸஸ் எழுதியதைக் கடவுள் தாம் படிக்கவேண்டும் -( ) தைரியம் இல்லாவிட்டால், மதம் இல்லை. - அரேபியா வீட்டில் உணவிருந்தால், விருந்தாளியைப் பற்றிய கவலையில்லை; மனிதன் சமய வாழ்க்கையில் முறையாக இருந்தால் மரணத்தைப்பற்றிக் கவலையில்லை. - ஆப்கானிஸ்தானம் கோணங்கள் (பிரதானமாய்த்) தெரியாதபடி சதுரமாயிருங்கள்; அற்பத்தனம் இல்லாமல் கண்யமாயிருங்கள்; வெறும் வேடங்கள் இல்லாமல் நேர்மையாய் இருங்கள்; வெளிப் பகட்டு இல்லாமல் அறிவுடன் திகழுங்கள். -ஸூஃபி உங்கள் (புத்திக்) கூர்மையை நிதானப்படுத்துங்கள்; உங்கள் கருத்துக்கள் பின்னிச் சிக்கலாவதைப் பிரித்துத் தெளிவு படுத்துங்கள்; உங்கள் (புகழ்) ஒளியைக் குறைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் காலத்திற்குத் தகுந்தபடி ஒழுகுங்கள். -ஸூஃபி மாலுமிகளுக்கு வடதுருவம் எப்படியோ, அப்படிக் கிறிஸ்தவர்களுக்கு விவிலிய வேதம். -ஜெர்மனி சமயத்திற்கு இரண்டு குழந்தைகள்; அவை விருப்பும் வெறுப்பும். -ரஷ்யா தன் சமயத்திற்காக உயிர் துறப்பவன் ஓர் இராஜ்யத்தை அடைகிறான். -ரஷ்யா