பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பொறையுள்ளவனின் கோபம் பொல்லாதது. -இங்கிலாந்து நாய் எறிந்தவனை விட்டுவிட்டுக் கல்லைக் கடிக்கிறது. -இங்கிலாந்து கோபம் வந்தவுடன் நூறுவரை எண்ணு. -இங்கிலாந்து காரணமில்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனல் காரணம் நல்லாயிருப்பதில்லை. -பிராங்க்லிஸ் கோபம் என்பது தற்காலிகப் பைத்தியம். -ஹொரேஸ் மறைத்து வைத்த கோபமே கெடுதல் செய்யும். -லெனிகா கோபத்தைத் தணித்துக்கொள்ளச் சிறந்தவழி நேரத்தைக் (மெளனமாகக்) கடத்துதல். -ஸ்ெனிகா அற்பனுக்கு மூக்கின்மேல் கோபம். -இந்தியா மூன்று முறை முகத்தில் அடித்தால், புத்தருக்கும் கோபம் வரும். -ஜப்பான் கோபத்தால் போனது சிரித்தால் வராது. -ஜப்பான் பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால், அவன் வயிறுதான் காயும். -துருக்கிஸ்தானம் கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்காருவாய். -துருக்கி அதிகக் கோபமாயிருக்கையில் வியாஜ்யத்திற்குப் போகாதே. உணர்ச்சிமயமா யிருப்பவர்களை எங்கு வேண்டுமானலும் துக்கிச் செல்லலாம். -ஃபிரான்ஸ் இருமுறை சூரியோதயத்தைக் கண்ட பின்பும் கோபத்தை நீடிக்கவிடக் கூடாது. -இங்கிலாந்து எல்லா விஷயங்களும் உனக்குக் கோபமூட்டுகின்றன; பூனையால்கூட உன் இதயம் வெடித்து விடுகின்றது. -ஸ்காட்லந்து பூட்டி வைத்த பூனை சிங்கமாக மாறும். -ஹாலந்து வெகுளியை வெல்லு. -கிரீஸ் கோபமும் பழிவாங்கும் சுபாவமும் மணந்து கொண்டால், கொடுமை என்ற குழந்தை பிறந்துவிடும். - ரஷ்யா