பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 குளிர்ந்து கிடக்கும் கல்லை அடித்தால். அதிலிருந்து தீப் பொறிகளே துள்ளிவரும். (மிகவும் அமைதியாயிருப்ப வனும் கோப மூட்டப் பெற்ருல் சீறிப் பாய்வான்.) —glorf பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையிலேயே முடியும். -ஆப்பிரிக்கா நீ ஆடுகளை மேய்ப்பதால்ை, கோபத்தை விட்டுவிடு. -ஆப்பிரிக்கா பொறுமை கோதுமைப் பண்டத்தை வேண்டுபவன் மாவரைக்கும் வரை காத் திருக்க வேண்டும். -ஷேக்ஸ்பியர் கொஞ்சம் பொறுமை யிழந்தால், பெரிய திட்டங்கள் வீனகும். * -சீன "பொறுமை என்ற சொல்லே வீட்டுக்கு அருமையானது. -சீன கன்றைச் சுமந்தவன் நாளடைவில் எருமையையும் சுமக்க (ւքւգ.ա 1ւհ. -இங்கிலாந்து வண்டி கி.மீச்சிட்டாலும் பாரத்தைத் தாங்கும். -வேல்ஸ் பூமி தமுலாய்க் கொதித்தாலும், நாம் அதன்மீதுதான் நடக்க வேண்டியிருக்கிறது. -டென்மார்க் தரை நன்ருயிருந்தால், சாலை நன்ருயில்லை; நாடு நன்ரு யிருந்தால், ஜனங்கள் நல்லவர்களில்லை. -டென்மார்க் ஒரு நிமிஷப் பொறுமை பத்து ஆண்டுகளுக்கு நன்மை. -கிரிஸ் பொறுமையுள்ளவனுக்கே உலகம் சொந்தம். -இத்தாலி அவிழ்க்கக் கூடியதை அறுக்க வேண்டாம். -போர்ச்சுகல் கரடியை ஒடத்தில் ஏற்றிக்கொண்டவன் கரை சேரும்வரை அதைக் கொண்டு செல்ல வேண்டும். -ஸ்வீடன் உலகில் பொறுமையோடு வாழ்வாயாக; உன்னை நேசிப்பவர் களைவிட வெறுப்பவர்கள் அதிகமாயிருக்கிருர்கள். _ -ஆப்பிரிக்கா