பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பொறுமைக்கு அழகான குழந்தையே பிறப்பது வழக்கம், -ஆப்பிரிக்கா நம்மை நம்மிலும் மேலோர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அதிருப்தி: நம்மிலும் தாழ்ந்தோருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருப்தி. -சீன நீ குடும்பத்தின் தலைவனக இருக்கவேண்டு மால்ை, உன்னை மூடனகவும் செவிடனுகவும் காட்டிக்கொள்ள வேண்டும். -சீன காத்திருந்தவனுக்கு எல்லாக் கதவுகளும் இறந்திருக்ஆ -சஞ) கையால் தட்டிவிட வேண்டியதற்குக் கத்தியை உருவ வேண்டாம். -எஸ்டோனியா உயரமான இடத்தைச் சுற்றிப் போ, தாழ்ந்ததைத் தாண்டிப் போ. -எஸ்டோனியா பொறுமையுள்ள மனிதன் வெற்றி பெறுவான். -அரேபியா பொறுமை கல்லையும் துளைக்கும். -அரேபியா பொறுமைக்கு அழகான குழந்தைகளே பிறக்கும். -அமெரிக்கா சிறு குற்றங்களைப் பொருட்படுத்தாதே; உன்னிடமும் பெருங் குறைகள் உண்டு. -ஸ்காட்லந்து பொறுமையுள்ளவனுடைய கோபத்தில் நீ எச்சரிக்கையாயிரு. -டிரைடன் ஒவ்வொரு தானிய மணியாகப் பொறுக்கிக் கோழி தன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றது. -இங்கிலாந்து பொறுமையுள்ளவன் எதை விரும்பிலுைம் பெறலாம். -இங்கிலாந்து பொறுமையில்லாதவர்கள் எவ்வளவு வறிஞர்கள்! -ஷேக்ஸ்பியர் நோயுள்ள ஒரு மனிதனுக்குப் பொறுமைதான் சிறந்த மருந்து. -இங்கிலாந்து பொறுமை கசப்புத்தான்; ஆனல், அதன் கனி இனிப்பானது. -ஃபிரான்ஸ்