பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மனிதர்களின் சொற்கள் செயல்களைவிட வீரமாயிருக்கும். -ஜெர்மனி சொற்களாகிய கடலில் காற்று வீசும் பொழுதெல்லாம் யாத்திரை செல்லவேண்டாம். -கிரீஸ் செயலால் நிறைவு பெருத ஒவ்வொரு சொல்லும் வீண். -கிரீஸ் சொல் பறவையன்று, அது வெளியே பறந்து சென்றல். நீ அதை மறுபடி பிடிக்க முடியாது. -ரஷ்யா பேசிய மொழியை விழுங்க முடியாது . -ரவியா என்னிடம் வார்த்தைகளில்லை, என் குரல் என் வாளில் உள்ளது. -ஷேக்ஸ்பியர் இ ன் சொல் பைபிலே பணம் இருக்கவேண்டும், இல்லாவிட்டால், வாயிலே இன்சொல் வேண்டும். -இந்தியா கொடுப்பதற்குச் சாக்கரை இல்லையானல், வாயால் இனிப் பாகப் பேசு. -இந்தியா அவசியம் வந்தால் கழுதையையும் ஐயா என்று அழைப்ா துண்டு. -ஆப்கானிஸ்தானம் நல்ல வரவேற்பே பாதி விருந்து. -ஜெர்மனி இனிமையாகப் பேசினல், கெட்ட சரக்கும் விற்றுப் போகும். -ஜெர்மனி மனிதனின் அழகு அவன் நாவின் இன்சொல். -போர்னியோ "என் சொத்து', 'என் சொந்த மனைவி' 'வீட்டுக்கு வாருங்கள் -இவை மூன்றுமே மிக இனிய வசனங்கள். -ஸ்காட்லந்து' ஓ ! அன்பான வார்த்தை, வசந்த காலத்துப் பகல் போல இன்பமளிக்கும். -ரவியா எனக்கு உணவளிப்பதைவிட, என்னை வரவேற்ருல் போதும். -எகிப்து