பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டு வரும். -ஆப்பிரிக்கா குளிர்ச்சியான சொற்கள் நாவைச் சுடுவதில்லை. -இங்கிலாந்து வாளால் வெட்டுவதைவிட, வார்த்தை அதிக ஆழமாய்ப் பாயும். -இங்கிலாந்து வாயில் தேன் இருந்தால் பணம் மிச்சமாகும். -இங்கிலாந்து நல்ல சொல் கொடுங் கோபத்தை அடக்கும். -ஜெர்மனி வாளி நிறையவுள்ள நீரைப் பார்க்கினும், ஒரு நல்ல சொல் அதிகத் தீயை அணைக்கும். -ஸ்பெயின் மன் னி ப் பு மன்னிப்புத்தான் நம்மைத் தேவர்களுக்கு நிகராக்குவது. -கிரீஸ் பழி வாங்குவதைவிட மன்னித்தல் மேலானது. -கிரீஸ் மன்னித்தலே அழகு வாய்ந்தது. -கிரீஸ் மன்னிப்பது நல்லது. அதைவிட நல்லது மறந்துவிடுவது. i -பிரெளனிங் "தந்தையே, அவர்களே மன்னித்துவிடும்; ஏனெனில், அவர்கள் தாம் செய்வதை அறியமாட்டார்கள்' கிறிஸ்து நாதர் ஒருவன் செய்த குற்றத்தையே மறந்துவிடுதல்தான் முழு மன்னிப்பாகும். -அரேபியா மற்றவரை மன்னிப்பவனே ஆண்டவன் மன்னிப்பான். -அரேபியா எந்த மன்னிப்பையும் ஏற்க மறுப்பவன் மக்களிலே இழிவான கயவன்; பாவத்திற்குப் பரிகாரம் தேடாதவன் எந்தக் குற்றத்தையும் மன்னிக்காதவன். -அரேபியா மன்னிப்புள்ள இடத்தில் இறைவனே யிருக்கிருன். -சீக்கியர் கேவலங்களையும் மாத்திரைகளையும் சுவைத்து உருசி பார்க்கக் கூடாது. (அப்படியே விழுங்கிவிடவேண்டும். அதாவது அவமரியாதைகளை நினைத்துக் கொண்டிராமல், மறந்துவிட வேண்டும்.) - -ஜெர்மனி