பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 வலியவந்த பொருள்கள் நாறும். -லத்தீன் அருகிலுள்ள (கோயில்) சாமி நோயைக் குணமாக்கா.து -எகிப்து செ ய ல் நாணிலே கோத்த அம்பு போய்த்தான் தீரவேண்டும். -சீன நல்ல சொற்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் மெளனமாக்குகின்றன. -ஃபிரான்ஸ் "ஒருவன் கொல்வதற்கும் செய்வதற்கும் இடையில் செருப்புத் தேய்ந்து போகும். -ஹாலந்து நல்ல செயலுக்கு வட்டி கிடைக்கும். -எஸ்டோனியா நீ என் முகத்தைப் பார்த்துச் சிரித்தால் அந்தக் கேவலம் படைத்தவனுக்கு; நீ என் உடைகளைப் பார்த்துச் சிரித்தால் அது தைத்தவனுக்கு; நீ என் செயல்களைப் பார்த்துச் சிரித்தால் அந்தக் கேவலம் எனக்கு உரியது. -எஸ்டோனியா கரு த் து ைட ைம கடை வைத்திருப்பவன் ஒரு கால் நொண்டியா யிருந்தால் அவனுக்கு நன்மை. -துருக்கி கவனமாயிருந்தால் துரதிருஷ்டத்தையும் தூக்கிவிடலாம். -அயர்லந்து வறுமையை எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பது செழுமைக்குச் சிறந்த வழி. -வேல்ஸ் உறையிலும் கத்தி கூர்மையா யிருக்க வேண்டும். -ஃபின்லந்து பெரிய கடலிலிருந்து உப்பு நீரைப் பருகுவதைவிட, சிறு ஒடையிலிருந்து நல்ல நீரைப் பருகுதல் மேல் -அமெரிக்கா