பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 உறுதியுடன் இரு காரியம் முடிந்துவிடும். -சீன உறுதி கொண்டுவிட்டால், நீ விடுத ையாவாய். -இங்கிலாந்து நீந்து, அல்லது ஆழ்ந்துவிடு. -இங்கிலாந்து முள்ளை மென்மையாகப் பிடித்தால்தான் குத்தும். —( "" ) ஒன்று கதவைத் திறந்து வை, அல்லது அடைத்துவிடு. -( ' ) அதிகமாக ஆராய்பவன் அற்பமாகவே செய்வான். -- -ஜெர்மனி இய லா ைம ஒரே காலால் இரண்டு தோணிகளில் நிற்க முடியாது. -சின நீர் குடித்துக் கொண்டே சீட்டியடிக்க முடியாது. -இத்தாலி ஒரு தண்டை நேராக நடக்கும்படி செய்ய உன்ல்ை இயலாது. -கிரீஸ் இயலாதவற்றில் ஆசை வைத்துக்கொண்டே யிருத்தல் ஆன் மாவைப் பற்றிய ஒரு நோய். -கிரீஸ் நடக்காது என்ற காரியம்தான் எப்பொழுதும் நடைபெறு கின்றது. -ஃபிரான்ஸ் முடியாது...அது பிரெஞ்சு மொழியே யில்லை. == -நெப்போலியன் அநுபவம் அதிகரித்தால், முடியாது என்ற காரியங்கள் பல முடிந்துவிடும். -இங்கிலாந்து உறுதியுடன் நினைக்கும் உள்ளத்திற்கு இயலாதது எதுவுமில்லை. -இங்கிலாந்து ஒரு தொழில் நடக்காது என்று நம்புவது அது நடைபெருமல் செய்வதற்கு வழி. -இங்கிலாந்து