பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 இதயம் ஒரு வெள்ளாடு, அதைக் கட்டி வைக்க வேண்டும். -அமெரிக்கா உன் சித் தம் சுத்தமாயிருந்தால், நீ கடல்மீது நடக்கலாம். -அமெரிக்கா உன் இதயத்திலும் உன் பணப்பையிலும் இருப்பதை எவரும் பாாக்காமல் இருக்கட்டும். -டென்மார்க் இன்பத்தைப் பங்கு போட்டால் இரட்டிப்பாகும். —( "" ) என் இதயத்தில் வசிப்பதானல், வாடகை வேண்டாம். -அயர்லந்து இதயத்தை அடைப்பதைவிட வீட்டை அடைத்துவிடுவது மேல். -ரஷ்யா இதயம் ரோஜா மலரா யிருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும். -ரவி:யா இதயம் ஏற்கும், மூளை ஒதுக்கும். -இந்தியா ஒருவரைத் தெரிந்து கொள்வதில் முதன்மையானது இதயத் தோடு இதயம் பழகுதல். -சீன எல்லாப் பெரிய மனிதர்களுக்கும் பொதுவான குணம் ஒன்றுண்டு; அவர்களுடைய அறிவுக்கும் ஆண்மைக்கும் ஆடியிலே ஒரு பச்சைக் குழந்தையின் இத்யம் அமைந் திருக்கும். -சீன மனிதன் ஒல்வொரு நாட் காலையிலும் தலையை வாரி கொள்கிருன்; இதயத்தை மட்டும் ஏன் வாருவதில்லை? தன் இதயத்தை அறிந்து கொண்டவன், கண்களை நம்ப மாட்டான். -சீன நேருக்கு நேர் நின்று பேசுகிருர்கள். ஆனல் அவர்களுடைய இதயங்களுக்கு இடையே ஆயிரம் மைல் துாரம். -சீன ஒட்டியுள்ள இதயங்கள் நெருங்கியிருப்பவை அல்ல. -சீன பெருமையும் நரகமும் இதயத்துள் உள்ளவை. -சீன தன்னை அறிந்தவன் பிறரை அறிவான். இதனால் இதயத்தோடு இதயத்தை ஒப்பிட முடியும். -சீளு