பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஒடப் பயந்துபோய் நின்ற சிலரையும் வீரர் என்று நினைப்ப துண்டு. -இங்கிலாந்து வில்லை வளைக்கத் தெரியாதவரெல்லாம் வில்வீரன் ராபின் ஹ-ட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பர். ( " ) வீரம் நீடித்து நிற்காது. -அயர்லந்து புண்படாமல் வீரகை முடியாது. -பல்கேரியா ஒரு பாவமும் அறியாதவனைக் கொன்றவன் வீரன்; அயோக்கியனைக் கொன்றவன் கொலைகாரன். | -அமெரிக்கா சுவரின் பாதுகாப்பிருந்தால், கிழவிக்கும் வீரம் வந்துவிடும். -ஸெக் அறிவு அதிகமாகி விட்டால் தைரியம் வந்துவிடாது. -( ' ) ஒடுகின்ற மனிதனும் மீண்டும் போர் செய்வான். -ஃபின்லந்து தப்புவதற்கு வேறு வழியில்லாவிட்டால், அநேகர் வீரராகி விடுவர். -நார்வே வீரரைச் சிறையிலே தேடுங்கள், மூடரைப் பாதிரிகளிடையே தேடுங்கள். -ரஷ்யா வீரனின் வியர்வை உதிரம். -ஆப்பிரிக்கா வெற்றி பெற்றபின் தன்னை அடக்கிக் கொள்பவன் இரண்டாம் முறையும் வென்றவனவான் -லத்தீன் சண்டை போடத் தைரியம் உள்ளவனே பயமுறுத்த முடியும். -மலாய் தன்னைத்தான் வெல்பவனே தலைசிறந்த வீரன். -ஸ்பெயின் வெற்றி யும் தோல்வியும் மனிதன் வெற்றியிலே கற்பது சொற்பம்; தோல்வியிலே கற்பது அதிகம். தோல்வி வெற்றியின் அடிப்படை வெற்றியை அடையும் வழி -டாவோ