பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 காதலில் அச்சம் இருந்தால், அதிருஷ்டமில்லை. -ஜெர்மனி பயம் சிங்கங்களையும் வசக்கிவிடும். -ஜெர்மனி மகாவீரர்களும் திடீரென்று தோன்றும் அபாயங்களுக்கு அஞ்சுவர். -லத்தீன் அச்சம் மனிதர்களை எதையும் நம்பும்படி செய்துவிடும். -( ' ) தீயோரைத் தடுத்து வைப்பது இரக்கமன்று, அச்சம்தான். -லத்தீன் அபாயங்களைக் காட்டிலும் அச்சங்கள் அதிகம். -லத்தீன் பயங்கொள்ளி தான் எச்சரிக்கையாயிருப்பதாகச் சொல்வான். -லத்தீன் உலோபி தான் சிக்கனமாயிருப்பதாகச் சொல்லுவான். -( ' ) கோழையும் கோழையும் எதிர்த்தால், முதலில் தாக்கியவன் ஜெயிப்பான். -ஸ்பெயின் அச்சம் அறிவுக்கு ஆரம்பம். -ஸ்பெயின் புருவுக்கு அஞ்சுவோன் தினை விதைக்க மாட்டான். --ரவியா போரில் கோழைகளால் பயனில்லை: அவர்கள் அங்கே _நிற் பார்கள்; ஆனல் போரில் ஈடுபடுவதில்லை. -கிரீஸ் கோழைகளின் ஆயுதங்கள் வெட்டவும் மாட்டா, குத்தவும் மாட்டா. -இத்தாலி கோழைக்கு வல்லமை இருந்தும் பயனில்லை. -இத்தாலி அதிக அச்சம் சண்டை செய்யவும் முடியாது, ஒடிச் செல்லவும் முடியாது. -ஷேக்ஸ்பியர் அறியாமையிலிருந்தே அச்சம் எழுகின்றது. -எமர்ஸன் கொடிய அபாயத்தில் அச்சத்திற்கு இரக்கமே தோன்ருது. -nஸர் போருக்கு அஞ்சுவோர் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள். -தமிழ்நாடு கடல்மீது உறங்குவோன் பணிக்கு அஞ்சுவான? -இந்தியா பாம்பு கடித்தவனுக்குக் கண்ட கயிறெல்லாம் பாம்புதான். -இந்தியா சூடுண்ட பூனை அடுப்பண்டை போகாது. -தமிழ்நாடு