பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 உரலில் தலை கொடுத்தபின் உலக்கைக்கு அஞ்சலாமா? -தமிழ்நாடு சாவு வருமுன்பே சாகவேண்டாம். -இந்தியா பயமே ஒடக் கற்றுக் கொடுக்கும். -அரேபியா இரவு வந்ததும், அச்சம் வீட்டு வாயிலுக்கு வருகின்றது: பொழுது விடிந்ததும், அது மலைக்குச் சென்றுவிடுகின்றது. -ஆப்பிரிக்கா அச்சத்தில் மனிதன் பிறக்கிருண், அச்சத்தில் அவன் மரிக்கிருன். -சீக்கியர் புருவின் கோபத்திற்கு அஞ்சவேண்டாம். -ஃபிரான்ஸ் ஒடுகிறவனுக்குப் பின்னல் யாரோ துரத்தி வருவதுபோலவே இருக்கும். -ஃபிரான்ஸ் பிறர் தள்ளு முன்னல், நீயாக விழவேண்டாம். -இங்கிலாந்து அஞ்சவேண்டியதற்கு அஞ்சினல், அபாயம் வராது. { -அயர்லந்து தெரியாத பாதையில் ஒவ்வோர் அடியும் மெதுவாகவே செல்லும், -அயர்லந்து பயத்திற்கு எல்லாம் பெரிதாகவே தெரியும். -பல்கேரியா ஒடுகிறவனைக் கண்டால் கோழையும் பிடிக்க ஓடுவான். -ஸெக் பயத்தில்ை இறப்பவனுக்கு மாதா கோவில் இடுகாட்டில் இடம் பெறத் தகுதியில்லை. -ஸெக் பயம் இருந்தால் வழி பிறக்கும். -டென்மார்க் நீ எதற்கு அஞ்சுகிருயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும். -எஸ்டோனியா பின்ல்ை பெரும் பயம் ஏற்படாமலிருப்பதற்காக எப்பொழுதும் கொஞ்சம் அச்சத்தோடிருத்தல் நலம். -ஃபின்லந்து முயல் ஒடுவதைப் பார்த்திராதவன் பயத்தைப் பற்றிப் பேசக் கூடாது. -இத்தாலி அச்சம் ஒவ்வொரு நற்குணத்திற்கும் தடையாக நிற்கும் -( ' ) ஒவ்வொரு பறவைக்கும் மேலே ஒரு காடை பறந்து கொண்டிருக்கும். -ஆர்மீனியா அச்சம் இதயத்தின் சிறை. - -ஸ்பெயின்