பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ஆசிரியர்களை அவர்கள் இருக்கும்பொழுது புகழவும்: வேலை யாட்களை வேலை முடிந்தபின் புகழவும்: நண்பர்களே அவர்கள் இல்லாதபொழுது புகழவும். -சயாம் ஒருவர் புகழ்ந்து பேசுவது தமக்கு அது திரும்ப வரும் என்பு தற்காக. -ஃபிரான்ஸ் புகழ் வரும்பொழுது நினைவு போய்விடும். -ஜெர்மனி ஒருவனுடைய இகழ்ச்சி அவனுக்கு முன்னல் செல்லும், புகழ் பின்னல் செல்லும். -ஜெர்மனி புகழில் முக்கால் பகுதி தலையிலுள்ளது. -வேல்ஸ் புகழ் வாழ்க்கைக்கு அப்பாலும் நிற்கும். -வேல்ஸ் பேரிகையைப் பார்க்கு முன்பே செவியால் கேட்கிருேம். - - -வேல்ஸ் புகழ் நல்லவனை மேலும் பெரியவனாகவும், கெட்டவனை மேலும் தீயவனாகவும் செய்கிறது. -டென்மார்க், நல்ல பெயர் வந்துவிட்டால், ஒருவன் துணிந்து பாவம் செய்யலாம். -ஹாலந்து இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன; புகழ் சிறந்த வர்களையும் கெடுத்து விடுகின்றது. -ஃபின்லந்து புகழ் என்பது வீரச்செயல்களின் நறுமணம். -ஃபின்லந்து இளமையிலேயே புகழடைந்தவன் பல தவறுகள் செய்கிறன். -சுவீடன் புகழ் என்பது பெரிய நிழல். -சுவீடன் ஒருவன் எவ்வளவு உயரமா யிருந்தாலும், அவன் நிமிர்ந்து நின்ருல், அடுத்த ஊரில் தெரியாது; அவன் பெயர்தான் அங்கு செல்ல முடியும். -ஆப்பிரிக்கா மனிதன் சவக்குழியில்தான் புகழப்படுகிருன். -ஆப்பிரிக்கா புகழ் வந்த பின்பு பேசாமல் போய்த் துரங்கலாம். -போர்ச்சுக்கல் நீதியில்லாமல் புகழ்ந்தால், கண்யமானவன் வ ரு த் த மடைவான். -ஃபிரான்ஸ் எல்லோராலும் புகழப்பெறும் ஒருவரால் புகழப்பட்டால் , நான் மகிழ்ச்சியடைகிறேன். -லத்தீன்