பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப த வி ஒட்டகத்தின்மேல் அமர்ந்தவுடன் அம்பாரிக்குள் மறைந்து கொள்ளாதே. (உயர்ந்த பதவி கிடைத்தவுடன் பழைய உறவினர், நண்பர்களை மறந்துவிடக் கூடாது.) -துருக்கிஸ்தானம் பதவியில் இல்லாதபோது ஒருவன் கண்டிக்கிற குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிருன். -சீன உத்தியோகம் மனிதன் குணத்தை அம்பலப்படுத்திவிடுவது — $5] /T&Yl) உ ைழ ப் பு உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல். -இந்தியா கழுதைபோல் உழைக்க வேண்டும்; பின்பு மனிதனைப்போல் உண்ணவேண்டும். -இந்தியா அடிமைபோல் உழைப்பவன் அரசனைப்போல் உண்கிருன் உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. -துருக்கி காட்டுப் பறவைக்கு உணவில்லை என்ருல், உலகம் முழுவதும் அதற்குத் திறந்து கிடக்கின்றது. -சீன ஈச்சம் பழத்தைக் கொட்டையுடன் விழுங்க முடியாது. - ( ' ) அவசரக் காலத்தின் தேவைக்கு ஒய்வு நேரத்தில் தேடி வை. -சீன மத்தளமாய்ப் பிறந்தால் சாகும்வரை அடிதான். -ஜெர்மனி அடுப்பு ஊதுபவன் கண்களில் பொறிகள் படத்தான் செய்யும் -ஜெர்மனி உழைப்பு கல்லிலிருந்து ரொட்டியை உண்டாக்கும். -ஜெர்மனி துடைப்பக்கட்டை தேய்ந்து போனல், அது செய்துவந்த வேலை துலக்கமாய்த் தெரியும். -ஜெர்மனி