பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 வெளியே போன கால், எப்பொழுதும் ஏதாவது கொண்டு வரும். -ஸ்காட்லந்து உண்பதைத் திரும்ப நிரப்பிவிட வேண்டும். (உழைப்பினல் தான் நிரப்ப முடியும். ) -எகிப்து மனிதன் உழைக்கவே பிறந்தவன். -பழைய ஏற்பாடு உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது. -புதிய ஏற்பாடு வயலில் முதலாளாகவும், படுக்கைக்குக் கடைசியாளாகவும் இரு. -சீன செய்யும் வேலையை மாற்றிக் கொள்ளல் உழைப்புக்குப் பரிகாரம். -இங்கிலாந்து உழைப்பவர்கள் ஏழைகளா யிருக்கிருர்கள்; ஏனெனில் அவர் கள் பெருந் தொகையினர். -இங்கிலாந்து உழைப்பு மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். -ஃபிரான்ஸ் உழைத்தலே பிரார்த்தனை செய்தல். -லத்தீன் உழைக்கவே பிறந்த நீ ஒய்வை ஏன் தேடுகிருய்? -லத்தீன் உழைப்பிலிருக்கிறது வாழ்க்கை. -ரஷ்யா தனக்குரிய வேலையைக் கண்டுகொண்டவனே பாக்கியசாலி; அவன் வேறு பாக்கியத்தைக் கேட்க வேண்டியதில்லை. -கார்லேல் நேரம் காகம் கூவிவிட்டது. பொழுதும் புலர்ந்துவிட்டது. -இந்தியா காகம் இல்லாத இடத்தில் பொழுது விடியாதா? -இந்தியா ஒர் அங்குல நேரம், ஒர் அங்குலத் தங்கத்தாலும் வாங்க முடியாதது. -சீன மீன் பிடிக்க நேரமுண்டு, வலை காயப் போடவும் நேரமுண்டு. - சீன காலம் கடவுளுடையது, நம்முடையதன்று. -ஹாலந்து காலத்தால் ஏற்பட்ட புண் காலத்தாலேயே ஆறும். -இங்கிலாந்து