பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 காலை நேரம்-சொக்கத் தங்கம். -எஸ்டோனியா ஆண்டுகள் அழகுக்கு மரியாதை செலுத்துவதில்லை.--செர்பியா காலம் வந்தால், வெண்ணெயும் தேனும்கூடக் கசக்கும். -பல்கேரியா ஒய வ வளைத்தே வைத்திருந்த வில் தொய்ந்து போகும். -இந்தியா ஒடிக் களைப்பதைவிட, அடைத்துக் கிடப்பதில் குதிரை அதிகக் களைப்படையும். *** -ஃபிரான்ஸ் ஒய்வுதான் பாதி உணவு. -ஜெர்மனி வயிறு நிறைந்துவிட்டால், எலும்புகள் கிடையில் கிடக்க ஆசை கொள்ளும். -அயர்லந்து நண்பகல் என்பதை நாமாக வைத்துக் கொள்ளலாம்; மால்ை நேரம் தாகை வரும். -டென்மார்க் விடுமுறை நாட்கள் அரசர்களைப்போல வந்து, ஆண்டிகளைப் போலச் செல்கின்றன. -எஸ்டோனியா வேலையோடு ஒய்வைக் கலந்து கொண்டால், உனக்குப் பயித்தியமே பிடிக்காது. -ரஷ்யா தொழிலில்லாமல் இருத்தல் ஒய்வாகாது. -இங்கிலாந்து ஓய்வைத் தேடி மக்கள் களைப்படைகின்றனர். -இங்கிலாந்து இறந்தவர்களுக்குத்தான் ஒய்வு -இங்கிலாந்து கடுமையான உழைப்புக்குப்பின் ஒய்வு: கடலில் புயலுக்குப் பின் துறைமுகம். -இங்கிலாந்து ஒய்வெடுத்துக் கொண்டபின் ஒரு மைல் ஒடவும். -ஃபிரான்ஸ் அதிக ஒய்வே வேதனையாகும். -கிரீஸ் வயலுக்கு ஒய்வு கொடுத்தால், அதிக விளைச்சல் காணும். -லத்தீன் செழிப்புள்ள நிலமும் ஒய்வில்லாவிட்டால் களராகிவிடும். -ஸ்பெயின் வேலையின் மூலமே ஒய்வு கிடைக்கும். -துருக்கி கி. ப.-1 8