பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 அதிகப் பேர்கள் இருந்தால், குறைந்த வேலைதான் நடக்கும். -ஜெர்மனி நன்ருகத் தொடங்கிய வேலை பாதி முடிந்ததாகும். -கிரீஸ் எந்த வேலையும் இழிவில்லை, சோம்பல்தான் இழிவு. -கிரீஸ் நீண்டபொழுது வேலையை முடிப்பதில்லை, இதயம்தான்_செய்து முடிக்கின்றது. -இத்தாலி முடிந்த வேலை பணத்தை எதிர்பார்க்கும். -போர்ச்சுகல் களைப் பு சிறு சுமையாயிருந்தாலும் கடைசி நேரத்தில் கனம் அதிக மாகத் தோன்றும். -அமெரிக்கா தொழில் எதிலும் ஆரம்பம் கஷ்டம். -எஸ்டோனியா கண் பார்த்ததைக் கை செய்யும். -தமிழ்நாடு வண்ணுர், பாணர், நாவிதர் மூவருக்கும் கவலையே யில்லை. -இந்தியா பாய் முடைபவர்கள் பாயில் படுப்பதில்லை. -இந்தியா குயவன் உடைந்த சட்டியிலேயே உண்பான். -இந்தியா தொழிலாளி வீட்டில் பசி எட்டிப் பார்த்தாலும், உள்ளே நுழையத் துணிவதில்லை. -இங்கிலாந்து ஏர்தான் அரசன், கடை இராணி, மற்றைத் தொழில்கள் நரக வாசனையுள்ளவை. -இந்தியா முதன்மையான தொழில் விவசாயம், நடுத்தரமானது வாணிபம், மட்டமானது பிறரிடம் ஊழியம், மூடத்தன மானது பிச்சையெடுத்தல். -இந்தியா வேலை செய்தால்தான் தொழிலைக் கற்கலாம். -இந்தியா பெண் ணுக்குக் கணவன் மனிதன்; மனிதனுக்கும் கணவன யிருப்பது அவன் நடத்தும் தொழில். -இந்தியா