பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 நாவு துணிகளுக்காக நெய்கின்றது; பேன உணவுக்காக உழுகின்றது. (கல்வி கற்பிப்பதும், நூல் எழுதுவதும் பிழைப்புக்காக.) -சீன உறுதியுள்ள மனிதனைக் கண்டு வேலையே அஞ்சும். -சீன கைத்தொழில் என்ற குழாய் கனகமாய்ச் சொரியும். -அரேபியா பல தொழில்களுள்ளவன் பட்டினியால் இறப்பான். -( ' ) உன் வேலையை நேசி. -Աե5ri இந்த உலகம் வேலை நிறைந்தது, மறு உலகம் ు తాలి: கை வேலை செய்கிறவரைதான் வாய்க்கு வேலையிருக்கும். (தொழில் செய்கிறவரையே உணவு கிடைக்கும்.) -யூதர் சிலர் கடவுளின் விபூதிகளைக் கண்டு வியக்கின்றனர்; மற்ற வர்கள் துணி தைப்புதைக்கூட வியந்து பார்க்கின்றனர். -ஆப்பிரிக்கா நூற்கக் கற்றுக்கொள்ளுமுன்னல், கொஞ்சம் பஞ்சு (கம்பளம்) சேதமாகத்தான் செய்யும். -ஃபிரான்ஸ் செல்வத்தைவிட ஒரு தொழில் மேலானது. -வேல்ஸ் தொழிலாளிகள் சகோதரர்கள். -வேல்ஸ் சரியாக வெட்டாத "கிராப் இருவருக்குக் கேவலம்.

  • -டென்மார்க்

பன்னிரண்டு தொழில்கள்-பதின்மூன்று தோல்விகள். -ஹாலந்து ஒவ்வொருவனும் தன் தொழிலில் திருடன்தான். -ஹாலந்து எவ்வளவு காலம் தோல் தைக்கும் ஊசி பைக்கு 'ளே கிடக்கும்? -எஸ்டோனியா நீ எந்த ஒடத்திலிருந்தாலும், ஒடத்தை ஒட்டிக்கொண்டிரு. -எஸ்டோனியா ஒரு கூடை முடைந்தவன் நூறு கூடைகள் முடைவான். -எஸ்டோனியா கடலில் கை ஆட்சி செய்கின்றது; பூமியில் உதடு ஆட்சி செய்கின்றது. -ஸ்பெயின்