பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 ஒரு மனிதனுடைய தொழில் அவனுக்கு கல்வியுமாகும். -அயர்லந்து தொழில் தெரிந்தவனிடம் வேலையே நடுங்கும். -எஸ்டோனியா பய ன் நிறையப் பால் கொடுக்கும் பசு இரண்டு கால்களால் உதைத் தாலும் தாங்கலாம். i. -இந்தியா தேனடையைப் பிழிந்தவன் கையை நக்கத்தான் செய்வான் o -இந்தியா என் செருப்பு சிறிதா யிருந்தால், உலகம் பெரிதா யிருந்து என்ன பயன்? -துருக் பல்லில்லாதவனுக்கு முத்திரிக்கொட்டை கிடைக்கிறது. சில பற்கள் உண்ணப் பயன்படும், சில வெளியே காட்டு வதற்கே பயன்படும். -கீழ்நாடுகள் பயனுள்ள பொருள் சுமையாகத் தோன்ருது. -ஃபிரான்ஸ் சாறு குடித்தவனுக்குத் தோடு தேவையில்லை. -ஜெர்மனி முட்கள் இல்லாவிட்டால், கடிகாரம் பயனற்றது. -போலந்து சேவலே கிராமத்தின் கடிகாரம். -போலந்து மையை உபயோகிக்காவிட்டால் காய்ந்துவிடும். -போலந்து அவன் வண்டியின் ஐந்தாவது சக்கரம். (வண்டிக்கு நான்கு சக்கரங்களே தேவை: ஐந்தாவது வீண்.) -பெல்ஜியம் விளக்கைப் பார்க்க வேண்டாம். வெளிச்சத்தைப் பார். -அயர்லந்து மலட்டுப் பசுவைவிட, பால்கறக்கும் வெள்ளாடு மேல். -எஸ்டோனியா (பிறருக்குச் சொல்லிக் கொடுக்காமல்) கட்டி வைத்திருக்கும் அறிவு பயனற்றது. -லத்தீன்