பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சரக்கைப் புகழ்ந்து பேசுபவன் விற்க விரும்புகிருன், குறைத்துப் பேசுபவன் வாங்க விரும்புகிருன். -லெக் ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு, தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும். -ஸெக் வியாபாரம் தங்கப் பெட்டி. -எஸ்டோனியா ஒரு மனிதனுக்கு உணவளிக்க முடியாத வியாபாரமே இல்லை. -எஸ்டோனியா கனவான்களிடம் விற்கப் போனல், பழங்களோடு கூடையும் போய்விடும். -ஃபின்லந்து வாணிபத்திற்குப் பகுத்தறிவு (கருத்து) வேண்டும். -பின்லந்து விலைக்கு வாங்கப் போகிறவன் குறை சொல்லிக்கொண்டே யிருப்பான். -இத்தாலி கடனுக்கு வாங்கி ரொக்கத்திற்கு விற்கவேண்டும். -இத்தாலி போணி பண்ண வந்தவனை விட்டுவிடாதே. -ரவி யா பொன்னில் இழப்பதைவிட, தவிட்டில் ஆதாயம் தேடு -ஆர்மீனியா வியாபாரம் சில சமயங்களில் தாயாயிருக்கும், சில சமயங் களில் மாற்ருந் தாயாகிவிடும். -ஆர்மீனியா விற்காத பொருள்களுக்கு விளம்பரம் தேவை. -அமெரிக்கா வியாபாரியா யிருப்பதன் நுட்பம் பணத்தை வாங்குவதில், விற்பனையிலன்று. -ஸ்பெயின் இரகசியமாகக் கொள்முதல் செய்து, வெளிப்படையாக விற்க கடவுள் ஒருவரையே நாங்கள் நம்புகிருேம், மற்றவர்க ளெல்லோரும் ரொக்கமே கொடுக்க வேண்டும். -அமெரிக்கா பணமில்லாத வியாபாரி நிலமில்லாத குடியானவன். -சுவீடன் பணம்தான் சந்தையை உண்டாக்கும்; மனிதர்கள் அல்லர். - -சுவீடன் நெடுநாள் தேங்கிக் கிடந்த சரக்குகளின் விலைகள் மறந்து போம். - -சுவீடன்