பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329 கூட்டு வியாபாரத்தைக் கண்டுபிடித்தவன் சயித்தான். -போலந்து கஸ்தூரி விற்று நஷ்டமடைவதைப் பார்க்கிலும், புழுதியை விற்று லாபமடைய வேண்டும். -அரேபியா சரக்கு தானே தன்னைப்பற்றிப் பேசும். -பல்கேரியா சிறு தொழில்களில் இலாபம் அதிகம். -சீன பல தொழில் கற்றவன் ஒன்றிலும் உருப்படான். -இங்கிலாந்து உத்தியோகத்தைவிட வாணிபமே சிறந்தது. -இங்கிலாந்து வாணிபம் பணத்திற்குத் தாய். -இங்கிலாந்து ஒவ்வொருவனும் தன் தொழிலைக் குறை சொல்லுவான். -இத்தாலி ஒரு தொழிலுள்ளவன் உலகைச் சுற்றலாம். -ஸ்பெயின் எம்பொழுதும் இலாபமடைந்து கொண்டே யிருப்பவன் வணிகனல்லன். -ஹாலந்து விற்றுக்கொண்டே யிருத்தல் வணிகனின் திறமையன்று: பணம் வசூலித்தலே திறமையாகும். -ஸ்பெயின் நஷடமடையும் வியாபாரி சிரிக்க முடியாது. -இங்கிலாந்து எந்தப் பொருள் கிராச்கியாகும் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடியவன் ஒராண்டு வாணிபம் செய்தால் போதும். -இங்கிலாந்து இ ேல வ தேவி இலேவாதேவிக்காரன் அரசனுக்கு ஒருபடி മേക. -இந்தியா விதையைப் பூச்சி அரிக்கின்றது; நகர மக்களை இலேவா தேவிக்காரன் அரித்துவிடுகிருன். -டென்மார்க் மறு உலகிலே இலவோதேவிக்காரன் பழுக்கக் காய்ந்த் நாணயங்களை எண்ண வேண்டியிருக்கும். -ரஷ்யா