பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரக சி யம் ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் பரசியும். -தமிழ்நாடு சுவர்களில் சுண்டெலிகள் உண்டு. சுண்டெலிகளுக்கும் செவிகள் உண்டு. -பாரசீகம் ஒரு பெண் அந்தரங்கமாக வைத்துக் கொள்ளக்கூடிய விஷயம் அவளுடைய வயதுதான். -ஃபிரான்ஸ் பகலுக்கு கண்கள் உண்டு, இரவுக்குச் செவிகள் உண்டு, -ஜெர்மனி வாயாடிகளுக்கு ஒர் இரகசியம் பாரமா யிருக்கும். -போலந்து உன் நண்பனிடம் ஒரு பொய்யைச் சொல்லிவை: அவன் அதை வெளியிடாமலிருந்தால், அவனிடம் உண்மையைச் சொல்லு. -அயர்லந்து இரகசியப் பேச்சு இல்லாத வீடே இல்லை. -ஸ்பெயின் உன் அன்பை மனைவியிடம் கொடு; அந்தரங்கத்தை அன்னே யிடம் கொடு. -ஸ்பெயின் இரகசியத்தை வெளியே சொல்பவன் மற்றவருக்குக் _கையா ளாகிருன். -இங்கிலாந்து எதிரிக்குத் தெரியாமல் உன் இரகசியத்தைக் காக்கவேண்டு மால்ை, அதை ஒரு நண்பனுக்கும் சொல்லாதே. -( ' ) காலத்தில் வெளியாகாத இரகசியமில்லை. -இங்கிலாந்து இருவருக்குத் தெரிந்த இரகசியம் தேவ ரகசியம்; மூவருக்குத் தெரிந்தது எல்லோருக்கும் தெரிந்ததாகும். -ஃபிரான்ஸ் இரகசியத்தில் கொஞ்சம் வெளியிட்டால் போதும், எல்லாம் வந்துவிடும். -ஜெர்மனி என் செருப்புக் கடிக்குமிடம் என்னைவிட வேறு எவருக்கும் தெரியாது. -கிரீஸ் .ே பச்சின் முத்திரை இரகசியம். -கிரீஸ்