பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 லாபத்தின் ஆசையால் அறிவாளரும் மூடராகின்றனர். இலாபம் ஏதாவது வேண்டுமானல், முதல் ஏதாவது முடக்க வேண்டும். -ஹாலந்து முதலில் கிடைத்த லாபத்தை விடாது பிடித்துக் கொள். -போலந்து யூதனைப்போல் பேரம் பேசி, கிறிஸ்தவனைப்போல் பணம் கெ ாடு. # -போலந்து இலாபமும் நஷ்டமும் அண்ணனும் தங்கையும். -பெல்ஜியம் நாளைக்கு எருது வருவதைவிட இன்று ஒரு முட்டை கிடைத் தால் போதும். -ருமேனியா குண்டு சித் தலைபோன்ற அற்ப லாபங்களுக்காக மக்கள் கிழக்கும் மேற்கும் அலைகிரு.ர்கள். -சீன மூன்றனவுக்கு நரித்தோல் வாங்கி, ஒருவன் வாலை மட்டும் முக்கால் ரூபாய்க்கு விற்றுவிட்டான். -இங்கிலாந்து இலாபம் கிடைக்குமானல் அவன் நரகத்திற்கும் போவான். -இங்கிலாந்து முக்கியமான வாய்ப்பைக் கவனித்துக் கொண்டிரு. —( " ) புகழைவிட ஆதாயம் மேல் - -இங்கிலாந்து ஆதாயமில்லாத விஷயத்தில் எனக்கு அக்கறையில்லை. ( " ) நங்கூரம் போனலும், சப்பலாவது மிஞ்சட்டும். -ஹாலந்து நெருப்பில் இழந்ததைச் சாம்பலில் தேடு. -ஹாலந்து தோற்கும் குதிரை சேணத்தைக் குறை சொல்லுகின்றது. -இங்கிலாந்து குதிரையை இழப்பதிலும் சேணத்தை இழ. -இத்தாலி சொற்ப நஷ்டம் திடுக்கிடச் செய்யும், பெரு நஷ்டம் பழகிப் போகும். -ஸ்பெயின் வாளியைப் போட்டுவிட்டுக் கயிற்றையும் இழக்க வேண்டாம். -ஸ்பெயின்