பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும். -ஸ்பெயின் இழப்பதற்கு உன்னிடம் எதுவுமில்லையானல், நீ எதையும் செய்து பார்க்கலாம். -யூதர் ஊ தி யம் நாவிதர், வைத்தியர், வக்கீல்கள், வேசிகள்-இவர்களுக்குக் கைமேல் காசு வைக்கவேண்டும். -இந்தியா கூலிக்குத் தக்கபடி சலவை." -இந்தியா பாட்டின் முடிவு பணம்தான். -இந்தியா ஆட்டம் ஆடுவது கரடி, பணம் பெறுவது கூத்தாடி. -ரஷ்யா உன் காலடியிலுள்ளது பிழைப்பு. -ஆப்பிரிக்கா கூலி யில்லாமல் வேலை பார்ப்பவன் நல்வாழ்க்கை வாழ (Մ)ւգ-Այո այ- -இத்தாலி அலையவைத்துக் கொடுப்பவன் இரட்டிப்பாகக் கொடுக்கவே மாட்டான். -இங்கிலாந்து மேளத்திற்குக் கூலி கொடுப்பவன் இஷ்டமான ராகத்தை வாசிக்கச் சொல்லலாம். -இங்கிலாந்து முன்ல்ை கூலியைக் கொடுத்துவிட்டால், பின்னல்தான் வேலை நடக்கும். -இங்கிலாந்து அற்பம் அற்ப மா ? உளசிதான் தையற்காரனுக்கு உணவளிக்கிறது: அற்பமான பொருளுக்கும் அதற்குரிய மதிப்பு உண்டு. -ஜெர்மனி காற்று வீசுகையில் கைவிசிறியின் பயன் தெரியாது. -இந்தியா மழை பெய்து ஒடைகள் நிறையும்; பனியால் அன்று. -இலங்கை குப்பை குவிந்தால், மலையாகிவிடும். -இந்தியா