பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 ஒர் ஆணி ஒரு லாடத்தைக் காக்கும், ஒரு லாடம் ஒரு குதிரையைக் காக்கும், ஒரு குதிரை ஒரு வீரனைக் காக்கும், ஒரு வீரன் ஒரு நாட்டையே காப்பான். -துருக்கி இற்றுப்போன ஒடத்திலும், மூவாயிரம் ஆணிகள் @తాతీత్కా -சஞ) கடலில் ஒரு துளிகூட விழுந்தாலும் (அந்த அளவுக்குக்) கடல் பெரிதாகும். -கீழ் நாடுகள் எலி வளை அற்பமானதுதான், ஆனால் விரைவில் அதுவே பெரிய பாதையாகி விடும். -கீழ் நாடுகள் நீ வந்ததும் எனக்குத் தெரியாது. போவதும் தெரியாது. (ஒரு கொசுகு ஒர் யானையின் காதில் நூறு வருடம் தங்கியிருந்து விட்டு வெளியேறும்போது, போய் வருகிறேன்!" என்று சொல்லிற்று. அப்பொழுது யானை சொல்லிய பதில் மேலேயுள்ளது. கொசுகுவைப்போல், முன்பின் தெரியாத சிலர் நம் வீடுகளில் வந்து பிரமாதமாகப் பேசிவிட்டுப் போவார்கள். அவர்களுக்கும் இது பொருந்தும்.) - -ஆப்பிரிக்கா ஒவ்வோர் இலையாகச் சேர்ந்துவிட்டால், ஒரு காடாகும். -அல்பேனியா மணிக்கு ஒர் அங்குலமானலும், ஒரு நாளைக்கு ஒர் அடியாகும். -இங்கிலாந்து சொற்ப விலையுள்ளது அற்பமென்று பழிக்கப்படும். —( " ) ஒவ்வொரு பெருமைக்கும் ஒரு நுண்ணிய விதையே காரணம். -வேல்ஸ் s ஒவ்வொரு ரோமமாய் உதிர்ந்து, தலை வழுக்கையாகும். == --- -வேல்ஸ் ஆளுக்கு ஒரு ரோமம், அடியேன் தலை மொட்டை. -தமிழ்நாடு ஒர் அணு நூறு அணுக்களைக் கொண்டுவரும். -இந்தியா எறும்புக்கும் நிழலுண்டு. -இந்தியா தோல் தைக்கும் ஊசியைக் கோணியில் கொண்டு செல்வ தில்லை. -பல்கேரியா