பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நீ உழும்பொழுது, ஆண்டவன் உனக்கு அளித்துள்ள நிலத்தில் பாடுபடு. -எகிப்து வயலுக்கு மிக உயர்ந்த உரம், அடிக்கடி சொந்தக்காரன் பார்வையிடுதல். -ஜெர்மனி அரை ஏக்கரில் அதிகம் விளையும். (சொற்ப நிலமுடையவன் அதிலேயே கண்ணும் கருத்தும்ாயிருந்து உழைப்பான் அதனால் மிகுந்த ப்யன் விளையும்.) -ஸ்காட்லந்து விவசாயியின் வரவேற்புக் கூடம் தொழுவின் முற்றம். -வேல்ஸ் கலப்பையுடன் முதலின் சென்றவன்தான் அறுவடைக்கும் முதலில் செல்வான். -வேல்ஸ் ஏர் உழ உழ, இயந்திரம் மாவு திரித்துக் கொண்டேயிருக்கும். -வேல்ஸ் உடையவன் கால் தடங்களே வயலுக்குச் செழிப்பளிக்கும். -ஸெக் கடவுளுக்கும் நிலத்திற்கும் கடன் கொடுப்பது நல்லது: அவர்கள் நல்ல வட்டி கொடுக்கிருர்கள். -டென்மார்க் உரவண்டிதான் கோச்சு வண்டிக்கு உணவளிக்கிறது. -எஸ்டோனியா மண்தான் பொன்னிலும் அருமையானது. -எஸ்டோனியா உடையவனில்லாத வயல் தாயில்லாக் குழந்தை. —( ?” ) ஏழைப் பெண்ணின் வயல் அவளுடைய முன்தானை யிலேயேயிருக்கும். (வேறு கதியில்லாதவன் அதிலேயே கவனமாயிருப்பான்.) -எஸ்டோனியா நிலத்தை ஒருவன் ஒருமுறை ஏமாற்றில்ை, அது அவனே ஒன்பது முறை ஏமாற்றிவிடும். -எஸ்டோனியா வயலில் ஒரு முறையாவது உழுதவன்தான் மனிதன். —(?” ) ஒர் அதிகாரி சில சமயங்களில் பணக்காரராகலாம்-ஒரு விப்ாபாரி அடிக்கடி பணக்காரராக லாம், ஒரு விவசாயி என்றுமே பணக்காரன். -எஸ்டோனியா பனி மழையாகாது, எனினும் தன் அளவுக்குப் பலன் கொடுக்கும். -ஜியார்ஜியா