பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஆன்மாதான் நம்மைப் பெருமையுள்ளவர்களாகச் செய்கின்றது. —லத்தீன் ஒரு மனிதன் உலகம் முழுவதையும் பெற்று, தன் சொந்த ஆன்மாவை இழந்துவிட்டால், என்ன பயன்?

— புதிய ஏற்பாடு

ஆன்மாவைப் பெற்றிருப்பதில் மிருகங்களும் நம்மோடு பெருமை யடைந்துள்ளன. —பிதரகோரஸ் செல்வம் குறைந்தால் சீர்திருத்தலாம்; ஆனால் ஆன்மாவின் வறுமையை நிரப்பவே முடியாது. —மாண்டெயின்

நாத்திகம்

நாத்திகன் சயித்தானுக்கு ஒரு படி மேற்போனவன்.

- இங்கிலாந்து

குருக்கள்

மக்களை மூன்று. பால்களாகப் பிரிக்கலாம்: ஆடவர், பெண்டிர், பாதிரிகள். — ஃபிரான்ஸ் இந்த உலகிலே இரத்தம் உறிஞ்சுவோர் மூவர் உண்டு; முகட்டுப் பூச்சி, தெள்ளுப்பூச்சி, பிராமணன். —இந்தியா மூன்று பொருள்களை நான் கண்டதே யில்லை. எறும்பின் கண், பாம்பின் கால், முல்லாவின் தானம். (முல்லா - முஸ்லிம் குரு.) —பாரசீகம் பாதிரியாரின் மகன் சயித்தானின் பேரப்பிள்ளை. — பல்கேரியா ஊரை எழுப்ப வேண்டுமானால், முதலில் பூசாரியை எழுப்ப வேண்டும். —ஜப்பான் கடவுளின் நண்பன் குருக்களின் பகைவன். — ஜெர்மனி வக்கீல்கள் பணப்பையைக் காலி செய்கிறார்கள்; வைத்தியர்கள் வயிற்றைக் காலி செய்கிறார்கள்; பாதிரிமார்கள் ஆன்மாவைக் காலி செய்கிறார்கள். — ஜெர்மனி