பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 குடியானவன் பிறவியிலேயே தத் துவஞானி; பிரபு அப்படி யாவதற்குப் படித்தாக வேண்டும். -போலந்து பிரபுக்களுக்குள்ளே சண்டை வரப்போகின்றது; குடியான வர்களே. உங்கள் குடுமிகளைக் கொடுங்கள். (பிரபுக்களுக் காகக் குடிபானவர்களே சண்டையிட்டு மடிய வேண்டி யிருக்கும்.) 髻 -லெக் குடியானவன் வைக்கோலை விற்றல் உணவை விற்ற மாதிரி. -எஸ்டோனியா நாம் எதைப் போட்டு வைத்தாலும், கோணியைச் சுமப்பவன் குடியானவன். -ரஷ்யா ஏர் பிடிப்பவன் ஒருவன், தட்டுடன் நிற்பவர் எழுவர்.-ரஷ்யா உழுபவனுக்குத் தீங்கு செய்ய நேரமில்லை. -ரஷ்யா உழுபவனுக்குப் பாட்டு வரும். -ரஷ்யா மகா மூடரான குடியானவர்களுக்குத்தான் மிகப் பெரிய உருளைக் கிழங்குகள் விளைகின்றன. -ஸ்வீடன் பொது ைம பொதுவிலுள்ள குதிரைக்கு லாடக் கூலி யார் கொடுப்பது? -இத்தாலி பொதுவிலுள்ள மாடு புழுத்துச் செத்தது. -தமிழ்நாடு பொதுப்பானை நடுச்சந்தியில் உடையும். -இந்தியா பொதுவிலுள்ள கூடத்தைத் துாப்பாரில்லை. -சீன எல்லோரும் சேர்ந்து ஒரு பொருளைப் பாதுகாத்தால், அது விரைவில் மறைந்துவிடும். -போலந்து கூட்டாக உள்ள வயலைக் கரடிகள் அழிக்கும். -அமெரிக்கா பொதுப் பல்பorம் புனித நீர் போன்றது, ஆளுக்கு ஒரு கை அள்ளிக் குடிக்கலாம். -இத்தாலி